அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
200வது பிறந்ததின நினைவு கொண்டாடப்பட்ட மறுதினமே லிங்கன் அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த மாதம் வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், 2008ஆம் ஆண்டுவரை நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதிகளில் 36வது இடத்தைப் பிடித்துள்ளார். சி-ஸ்பான் எனும் தொலைக்காட்சி நடத்திய கணக்கெடுப்பிலேயே இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
சர்வதேசத் தொடர்புகளில் முன்னாள் ஜனாதிபதி புஷ் குறைந்தளவு புள்ளிகளைப் பெற்றுள்ளார். சர்வதேச தொடர்புகளில் அவருக்கு 42வது இடமும், பொருளாதார முகாமைத்துவத்தில் 40வது இடமும், அனைவருக்கும் நீதிகிடைக்கவேண்டுமென்ற வகைப்படுத்தலில் அவருக்கு 25வது இடமும், தலைமைத்துவம், குறிக்கோள்களைத் தயாரித்தல் போன்ற வகைப்படுத்தலில் அவருக்கு 25ஆவது இடமும் கிடைத்துள்ளன.
ஆனால், இந்தக் கணக்கெடுபில் பயன்படுத்தப்பட்ட 10 வகைப்பாடுகளிலும் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முதல் மூன்று நிலைகளுக்குள் இடம்பிடித்துள்ளார்.
சி-ஸ்பான் நடத்திய கணக்கெடுப்பின்படி 2000ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளினடன் 21வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் றீகன் 11வது இடத்திலிருந்து 10வது இடத்திற்கும், ஜோர்ஜ் எச்.டபிள்யு.புஷ், 20வது இடத்திலிருந்து 18வது இடத்திற்கும், ஜிமி காட்டர் 25வது இடத்திலிருந்து 22வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment