தலையை துண்டித்து மகளை படுகொலை செய்த தந்தை
இந்திய வம்சாவளியான கனடிய தந்தையொருவர், தனது இரண்டு வயது சின்னஞ்சிறிய மகளை தலையை வெட்டி படுகொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
வான்கூவரில் வசிக்கும் 48 வயதான லக் வின்டர் சிங் கஹ்லொன் என்ற இந்த நபர், தனது மனைவி மன்ஜித் பாடசாலை சென்ற ஏனைய இரு மகள்மாரை அழைத்து வரச் சென்றிருந்தபோது இந்தப் படுகொலையை செய்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததையிட்டு லக்வின்டர் அதிருப்தி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாவது குழந்தை பிறந்த பின் வேலையை இழந்து வீட்டிலேயே பெரும்பாலான பொழுதை அவர் கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இக்குற்றச் செயலுக்காக லக்வின்டருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment