ஒஸாமா பின்லேடன் அவுஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பம்
150,000 அவுஸ்திரேலிய டொலர் சம்பளத்தில் ஹமில்டன் தீவின் பராமரிப்பாள ராக 6 மாத காலம் பணியாற்றுவதற்கு விண்ணப்பங்களைக் கோரி குயீன்ஸ்லான்ட் சுற்றுலாத்துறை அண்மையில் விளம்பரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் "யூடியூப்' இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 30 செக்கன் நேர வீடியோ செய்தியில் ஒஸாமா பின்லேடன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர், ""நான் இந்த வேலைக்கு பொருத்தமான ஒருவர் எனக்கு மணற்பாங்கான பிரதேசங்களில் தொடர்பில் மிகவும் பரிச்சயம் இருக்கிறது. கைவினைக்கலை மற்றும் புதுமை படைத்தல் உள்ளடங்கலான கலைகளில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது'' எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் குயீன்ஸ்லாண்ட் சுற்றுலாத்துறையினர் விபரிக்கையில், ஒஸாமா பின்லேடனின் பெயரைப் பயன்படுத்தி நபரொருவர் தம்மை முட்டாளாக்க முயற்சிப்ப தாக கருதுவதாகவும், தாம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த விளம்பரத்துக்கு ஒஸாமா பின்லேடனே விண்ணப்பித்திருப்பின், உலகப் பெருளாதார நெருக்கடி பயங்கரவாதிகளையும் விட்டுவைக்கவில்லை என்றே கருத வேண்டியிருக்கும் என மேற்படி சுற்றுலாத்துறையைச் சேர்ந்த பிறிதொருவர் நகைச்சுவையாகக் கூறினார்.
Osama Bin Ladens Dream Job video
0 விமர்சனங்கள்:
Post a Comment