எனது காதலனின் மனைவியை கொல்ல அடியாள் தேவை
தனது காதலனின் மனைவியைக் கொல்ல அடியாள் ஒருவர் தேவை என இணையத்தளம் மூலம் விளம்பரம் செய்த பெண்ணொருவருக்கு 12 வருடங்கள், 7 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
மிக்சிகன் மாநிலத்திலுள்ள ரொக்போர்ட் (Rockford) எனும் இடத்தில் வசிக்கும் ஆன் மேரி வின்ஸ்கொட் (Ann Marie Linscott ) (48 வயது) என்பவரே "கிரெய்க்ஸ்லிஸ்ட்' வெப்தளத்தில் (Craigslist.org Web site) மேற்படி விநோத விளம்பரத்தைச் செய்து தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
கலிபோர்னியாவில் வசிக்கும் தனது காதலனின் மனைவியான ஒராவில்லேயைக் கொல்வதற்கு இணையத்தளம் விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்த மூவரில் இருவருக்கு தலா 5000 அமெரிக்க டொலர் பணத்தை ஆன் மேரி வழங்கியுள்ளார்.
ஒராவில்லேயின் (Oroville) கணவருக்கும் ஆண் மேரிக்கும் (Ann Marie) இணையத்தளம் மூலமே பழக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment