எரிக் சொல்யஹய்ம் இந்தியா வந்தார்; பிரணாப் முகர்ஜியுடன் சந்திப்பு இலங்கைப் பிரச்சினை குறித்து ஆராய்வு
நோர்வே நாட்டு அமைச்சரும், இலங் கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இவர் பேச்சு நடத்தினார். அதன் போது இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்படும் பொதுமக்களின் நிலைமைகள் குறித்துக் கவலை தெரிவித்தார்.
முஹர்ஜியைச் சந்தித்தபின் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:
இலங்கையில் தற்போது நிகழ்ந்துவரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் தினமும் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புக்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. எனவே, இரு தரப்பினரும் யுத்தத்தை உடனே நிறுத்தி பேச்சுமூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரவேண்டும் என வலியுறுத்தினர். இதேவேளை, எரிக்சொல்ஹெய்ம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் சந்தித்துப் பேச்சுநடத்தினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment