இலங்கைக்கு ராணுவ உதவிகள் வழங்கியது கருணாநிதிக்கு தெரியும்
இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை வழங்கியது கருணாநிதிக்கு முன்பே தெரியும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த எந்த இலாக்காக்கள் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதைத் தெரிந்து கொண்டு மத்திய அரசை மிரட்டிய கருணாநிதிக்கு, தமிழர்களுக்கு எதிரான தீங்குகள் நிகழும்போது அதை தெரிந்து கொள்ளத் தெரியாதா?
ஊடகங்களுக்குத் தெரியும்போது, மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு தெரியாதா?
இலங்கைக்கு நவீன ஆயுதங்கள் வழங்குதல், ராணுவப் பயிற்சி ஏல்லாம் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான் நிகழ்ந்து வருகின்றன. நான் முதல்வராக இருந்தபோதும், மத்திய அரசில் அங்கம் வகித்தது திமுகதான். எனவே அப்போது இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகளுக்கும் கருணாநிதிதான் பொறுப்பு.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment