புலிகளின் முக்கியஸ்தர்கள் ஐவர் பலி
முல்லைத்தீவு மாவட்;டத்திலுள்ள சாலைப் பகுதியில் இராணுவத்தினருடன் இன்று(05) காலையில் இடம்பெற்ற மோதல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஐவர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்புலி பிரிவைச் சேர்ந்த விநாயகம், பகலவன், காதர், கண்ணன், அன்னைவேலன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களென இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினர் மீது இவர்கள் ஆட்டிலறி தாக்குதல் நடத்திய போது பதில் தாக்குதலை இராணுவத்தினர் மேற்கொண்டனர். அதன் போதே இவர்கள் ஐவரும் கொல்லப்பட்டனர். இந்த ஐவருடன் மேலும் பல சாதாரண உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.
மைக்-4 என அழைக்கப்படும விநாயகம் கடற்புலிகளின் தலைவரான சூசைக்கு மூன்றாவது இடத்தில் பதவி நிலை வகிப்பவராவார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment