தினமும் இலங்கை பிரச்சனை தொடர்பாக 10,000 மின் அஞ்சல்கள் வருகின்றன
ஜெனீவாவிவில் தற்போதை நடைபெற்று வரும் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான 10வது கூட்டத் தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்று வரும் மனித அவலம் குறித்தே முக்கியமாக பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அங்குள்ள நிலவரம் தொடர்பாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின் அஞ்சல்கள் தமக்குக் கிடைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
சுயமாக சிறீலங்காவிலிருந்து வந்திருந்த மனித நேய அமைப்பின் சட்டத்தரணி நிமல்கா பர்ணாந்து மற்றும் சுதந்திர ஊடகவிலாளர் ரவி சந்திரலால் ஆகியோருடன் கூடிய குழுவினரும் அங்கு நடைபெறும் பிரச்சனைகள் குறித்து தெரிவித்துள்ளனர். தவிரவும் TRO தரப்பில் லண்டனிலிருந்து அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment