திருமலையில் உணவு நஞ்சானதால் ஒருவர் மரணம்: 123 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி, பேக்கரிக்குச் சீல்
திருகோணமலையிலுள்ள பேக்கரியொன்றிலிருந்து பெறப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து நோய்வாய்ப்பட்ட 123 பேர் திருமலை வைத்தியசாலையில் இன்று (24) அனுமதிக்கபட்டதாக மருத்துவ அத்தியட்சகர் அனுஷியா ராஜ்மோகன் லங்கா ஈ நியூ ஸூக்குத் தெரிவித்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் அறுவர் விசேட மருத்துவ சோதனைக்கட்படுத்தப்பட்டனரென்றும் பின்னர் இவர்களில் இருவர் விசேட கண்காணிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு நஞ்சானதன் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டு திருமலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட 62 வயதான நபர் ஒருவரின் சடலம் தொடர்பான மரண விசாரணையின் பின்னரே இந்த மரணம் நிகழ்ந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியுமெனக் கூறிய அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எவரும் ஆபத்தான நிலையில் காணப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட பேக்கரியை சுகாதாரப் பிரிவினர் சீல் வைத்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment