1563 பேர் படையினரிடம் தஞ்சம்
புலிகளின் பிடியில் இரு ந்து மேலும் 1055 பொது மக்கள் இராணுவ கட்டுப் பாட்டுப் பகுதிக்கு தப்பி வந்துள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.
இது தவிர மேலும் 508 பேர் பருத்தித்துறை பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர். இரணைபாலை பகுதியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58ஆம் படைப் பிரிவினர் சரணடைந்த 1055 பொதுமக்களும் வவுனியா நிவாரண கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தப்பி வந்த பொதுமக்களில் 308 பேர் ஆண்கள் எனவும் 316 பேர் பெண்கள் எனவும் 371 பேர் சிறுவர்கள் என்றும் அறிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்பி வந்துள்ள மேற்படி பொதுமக்களில் பலர் புலிகளின் ஷெல் மற்றும் ஆட்டிலறி தாக்குதலினால் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதிக்கு தப்பி வந்த மக்கள் யாழ். குடாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதோடு இதுவரை சுமார் 51 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.
சிவிலியன்களின் வருகை 52 ஆயிரமாக அதிகரிப்பு
முல்லைத்தீவில் புலிக ளின் பிடியிலிருந்து தப்பி இராணுவக் கட்டுப்பா ட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ள பொது மக்களின் எண்ணிக்கை 52 ஆயிரமாக அதிகரித்துள்ள தாக இராணுவப் பேச் சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித் தார். நேற்றைய தினம் மாத்திரம் 845 பொது மக்கள் பாதுகாப்புப் படை யினரிடம் தஞ்சமடைந்து ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் பிடியிலிரு ந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற் பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்று முன்தினம் மேலும் 1055 பொது மக்கள் இராணுவ
கட்டுப் பாட்டுப் பகுதிக்கு தப்பி வந்துள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது. இது தவிர மேலும் 508 பேர் பருத்தித்துறை பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர். இரணைபாலை பகுதியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58ஆம் படைப் பிரிவினர் சரணடைந்த 1055 பொதுமக்களும் வவுனியா நிவாரண கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தப்பி வந்த பொதுமக்களில் 308 பேர் ஆண்கள் எனவும் 316 பேர் பெண்கள் எனவும் 371 பேர் சிறுவர்கள் என்றும் அறிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்பி வந்துள்ள மேற்படி பொதுமக்களில் பலர் புலிகளின் ஷெல் மற்றும் ஆட்டிலறி தாக்குதலினால் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதிக்கு தப்பி வந்த மக்கள் யாழ். குடாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதோடு இதுவரை சுமார் 51 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment