முஸ்லிம்களுக்குத் துரோகமிழைக்கும் முஸ்லிம் காங்கிரஸ்
ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்த கால த்தில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேணி, அரசி யல் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கிலேயே மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப்பினால் முஸ் லிம் காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
மாமனிதர் அஷ்ரப்பின் கனவுகளை நனவாக்கும் உயரிய இலட்சி யத்துடன் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் அவர் பின்னால் அணி திரண்டார்கள். முஸ்லிம் இளை ஞர்கள் தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டார்கள்.
சிறுகச் சிறுகச் சேரும் நீரோட்டம் ஒன்று சேர்ந்து நதியான பின்பு கடலை நோக்கி பிரவாகித்து ஓடு வதைப் போல சிறுகச் சிறுக கட்டியெழுப்பப்பட்ட முஸ்லிம்களின் அரசியல் இயக்கமானது ஒரு கட்ட த்தில் தேசிய நீரோட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டது.
ஏனைய இனங்களுடன் சுமுகமான உறவைப் பேணியபடி, ஏனைய இனங்களின் உரிமைகளை மதித்தபடி, முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடு ப்பதற்கான வழிமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. அதன் அடிப்படையிலேயே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் 1994 ஆம ஆண்டில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்தின் பங் காளிக் கட்சியாக்கினார்.
ஏனைய இனங்களை அரவணைத்துச் செல்லாதவரை இந்நாட்டில் சுபீட்சமான யுகமொன்றையும், நல்லி ணக்க அரசியல் சூழலொன்றையும் உருவாக்க முடியாது என்பதை அன்று அவர் தூரநோக்குடன் சிந்தித்துச் செயலாற்றினார். ‘சுபீட்சமான இலங்கையில் சமத்துவ உரிமையுடன் முஸ்லிம்கள்’ என்பதே மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கனவாக இருந்தது.
அதற்காக ஆரம்ப கால த்தில் மறைந்த பெருந்தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியுடன் பாராளுமன்றத்தினுள் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அரசியல்வாதிகளான கதிர்காமத்தம்பி, முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் கலாநிதி திவ்வியநாதன் போன் றோரை அணுகி அவர்களையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.
அதன் பின்பு அதனைப் பரந்துபட்ட நடவடிக்கையாக மாற்றி, அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அரசியல் சக்தியாக தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டினார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்கான காரணம் ஜன நாயக வழியில் அனைத்து மக்களும் தங்கள் உரிமை களை வென்றெடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்தும் நோக்கிலாகும். எனவே, பயங்கரவாத செயற்பாடுக ளையும் அதற்கான வழிமுறைகளையும் அவர் என்றை க்கும் வெறுத்தார்.
அதன் காரணமாகவே சந்திரிகா அரசாங்கத்தில் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த் தைகள் நடந்த போதும் அதில் பங்குபற்றாது, அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் ஊடாக தமது விடயங் களை முன் வைத்தார். மற்றபடி எந்தக் கட்டத்திலும் பயங்கரவாத அமைப்பான புலிகளுடன் ஒட்டி உற வாடவோ, அவர்களின் நல்லபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ளவோ, அல்லது அவர்களின் வழிமுறைகளை அங்கீகரித்து அவர்களின் செயற்பாடுகளை நியாயப்படு த்தவோ ஒரு போதும் அவர் முன்வரவில்லை.
இவ்வாறாக தூரநோக்குடன் வளர்த்தெடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது இன்றைக்கு முஸ்லிம் களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குப் பதிலாக அதனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, முஸ்லிம்களை ஐக்கிய தேசியக் கட்சியினதும் பாசிசப் புலிகளினதும் காலடியில தாரைவார்க்கும் இலட்சிய த்தை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது.
முஸ்லிம்களின் உரிமைகள் என்பன அக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு மறந்து போன விடயமாகிப் போய் விட்டது. தேசிய ஐக்கியம் என்பது கட்சித் தலைமைத்துவத்துக்கு வேப்பங் காயாகிப் போய் விட்டது. இவ்வாறாக படிப்படியாக முஸ்லிம்களை ஏனைய இனங்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்தி, அவர்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் பாசிசப் புலிகளினதும் சியோனிச முகவர்களான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் தாரை வார்ப்பதே கட்சியின் இன்றைய தலைமைத்துவம் வகுத்துச் செயற்படும் அரசியல் வியூகமாக இருக்கின்றது.
அதன் காரணமாகவே அண்மையில் அக்குரஸ்ஸை, கொடப்பிட்டியவில் தேசிய மீலாத் விழா அங்கு ரார்ப்பண வைபவத்தின் போது தற்கொலைத் தாக்கு தலை நடத்திய பாசிசப் புலிகளை கண்டிக்காத முஸ் லிம் காங்கிரஸ் தலைவர், அதற்குப் பதிலாக அத் தாக்குதலை நியாயப்படுத்தும் வண்ணமாக கருத்து வெளியிட்டிருந்தார். அரசாங்க அமைச்சர்கள் கலந்து கொண்டதன் காரணமாகவே குறித்த வைபவம் தற்கொலைத் தாக்குதலுக்கு உட்பட்டது என்பதே அவரது புதிய கண்டுபிடிப்பாகும்.
அப்படியெனில் இவ்வாறான வைபவங்களில் அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்பதாக அவர் வாதிட முன்வருகின்றாரா? அல்லது அவ்வாறு அமைச்சர்களை கலந்து கொள்ள வைப்பதன் மூலமாக அரசாங்கம் முஸ்லிம்களை கெளரவிப்பதை கைவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றாரா? அதுவும் இல் லாது போனால் முஸ்லிம்களின் விழாக்களில் மாற்று மத அமைச்சர்களை கலந்து கொள்ள வைப்பதன் மூலமாக இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவ தற்கான வாய்ப்பு உருவாகுவதை தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றாரா?
அப்படியெனில், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் மடவளை தேசியப் பாடசாலையில் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழாவிற்கு அமைச்சர்கள் அழைக்கப்படவில்லையா? 2001 தொடக்கம் 2004 வரை முஸ்லிம் கலாசார அமைச்சராக அவர் பதவி வகித்த போது நடைபெற்ற தேசிய மீலாத் விழாக்களுக்கு அரசாங்க அமைச்சர்கள் அழைக்கப்படவில்லையா? அப்படியெனில் தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் அவரது வாதமா?
இதே ஹக்கீம் தான் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவராக இருந்தவரும், இறக்கும் போது பூநகரிப் பிரதேசத்துக்கான புலிகளின் கட்டளைத் தளபதியாக இருந்தவருமான தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்ட போது பாராளுமன்றத்துக்குள்ளேயே அதனைக் கண்டித் தவர். அத்தோடு தமிழ்ச்செல்வனுக்காக ஆழ்ந்த இரங்க லையும் தெரிவித்துக் கொண்டார்.
ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட போது அதனைக் கண்டிக்கும் திராணி இருந்த ஹக்கீமுக்கு, பயங்கரவாதிகளால் அப்பாவிகள் கொல்லப்படும் போது அதனைக் கண்டிப்பதற்கான திராணி இருப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் பாசிசப் புலிகளை நியாயப்படுத்தும் விதமாகவே கருத்துகளை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதன் மூலமாக தனது எஜமானார்களான ஐக்கிய தேசி யக் கட்சியையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திருப்தி ப்படுத்தவே அவர் முயற்சிக்கின்றார்.
அக்குரஸ்ஸையில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலுக்கான பழியை திசை திருப்புவதற்காக ஹக்கீம் எடுக்கும் முயற்சியிலிருந்தே அவரது புலி சார்பு போக்கு நன்றாக தெளிவாகின்றது. சமூகத்தின் உரிமை களைவிட தான் சார்ந்து நிற்பவர்களின் நலன் முக்கியம் என்ற அவரது குறுகிய மனப்பாங்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம்களுக்குப் பெருந் துன்பம் விளைவித்தவர்கள் புலிகள் என்ற உண்மையை மறந்து 2002 ஆம் ஆண்டில் ஓடிப் போய் அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டார். அவர்களிடம் விருந்துண்டு வந்தார். அந்த விருந்தின் மயக்கத்தில் வாழைச்சேனை யில் இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் புலிகளால் பெற்றோர் முன்னிலையில் உயிருடன் எரிக்கப்பட்ட ‘@!ஜிu, மூதூரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு துரத்திய டிக்கப்பட்ட போதும் கண்டும் காணாமல் இருந்தார். குறைந்த பட்சம் அவற்றைக் கண்டித்து அறிக்கை தானும் விடவில்லை. அவ்வளவிற்குப் பின்பும் புலிகளு க்கும் முஸ்லிம்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பாகவே அவர் முயற்சி செய்தார்.
2006 ஆம் ஆண்டில் மூதூரில் முஸ்லிம்கள் மீது புலிகள் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டு அந்த மக்களை அங்கிருந்து விரட்டியடித்த போது ஹக்கீம் வாய்மூடி மெளனியாகத் தான் நடந்து கொண் டார். புலிகளின் செல் தாக்குதலில் காயமுற்றவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த அம்பு லன்ஸ் வண்டியை இலக்கு வைத்து புலிகள் மலையடி வாரத்தில் தாக்குதலை மேற்கொண்டு சர்வதேச சட்டத்துக்கு முரணாக நோயாளர்களை கொன்றொழி த்த போதும் ஹக்கீமின் வாய் மூடப்பட்டேயிருந்தது.
அதற்கு முன்பு கிண்ணியாவின் விறகு வெட்டிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போதோ, அல் லது குரங்குபாஞ்சானில் முஸ்லிம்களின் பள்ளிவாச லொன்றை தங்களது முகாமாக புலிகள் ஆக்கிரமித்த போதெல்லாம் கூட ஹக்கீம் புலிகளை எதிர்த்து ஒரு வார்த்தை தானும் வாய் திறக்கவில்லை. அந்தளவுக்கு புலிகள் மேல் அவருக்கு ஒரு பாசம் இருந்தது.
மேலும், 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை நிலவிய அமைதிச் சூழலையும், புலிக ளுடன் ஹக்கீமுக்கு இருந்த நல்லுறவையும் பயன் படுத்தி வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் களை மீளக்குடியமர்த்துவதற்கான பொன்னான வாய் ப்பு ஹக்கீமுக்கு கிட்டியிருந்தது. அதற்கு வலுச்சேர்க்கும் வண்ணமாக அன்றைக்கு அவரிடம் புனர்வாழ்வு விடயங்களும் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால் குறைந்த பட்சம் அதற்கான முயற்சிகளையேனும் அவர் மேற்கொள்ளவில்லை. வெறுமனே காலம் கடத்திக் கொண்டு இருந்தது தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.
அதே போல 2006 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மூதூரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், அமீர் அலி என்போர் களத்தில் நின்று அர்ப்ப ணிப்புடன் செயற்பட்ட போது, அந்த மீளக் குடியமர்த்தல் நடவடிக்கையை அன்று தீவிரமாக எதிர்ப் பதில் ஹக்கீம் முன்னின்றார்.
இது வரை காலமும் முஸ்லிம்களை ஒட்டாண் டிகளாக விரட்டியடிக்க வணக்கத்தலங்களில் கூட்டுப் படுகொலை செய்த பலர் முன்னால் உயிருடன் போட்டு எரித்த பாசிசப் புலிகள் எதற்காக மாத்தறை யில் இடம்பெற்ற மீலாத் விழா மீது தற்கொலைத் தாக்குதலைத் தொடுத்தார்கள் என்பதும், அந்தத் தற்கொலைத் தாக்குதலை நியாயப்படுத்தும் வண்ண மாக அரசாங்கத்தைக் குறை கூறி ஹக்கீம் அறிக்கை விட்டதற்கும் என்ன காரணம் என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்பது பொருத்தம்.
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு விடுவிக்கப்பட்டு இப் போதைக்கு 14 வருடங்கள் கழிந்து விட்டன. ஆயினும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின்பான அமைதி சூழலிலும் கூட ஒரு சில குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியது தவிர, வடக்கிலிருந்து புலிகளால் விரட் டப்பட்ட முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற முன் வரவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எப்போதும் நாட்டு நலனை விட புலிகளை வலுப்படுத்துவதற்குத் தான் முன்னுரிமை கொடுக்கும் என்பதால் தாங்கள் வடக்கில் மீளக் குடியமர்ந்தாலும் மீண்டும் புலிகளால் விரட்டியடிக்கப்படலாம் என்பதை அந்த மக்கள் உணர்ந்திருந்தார்கள். அது மட்டுமன்றி இன்றைக்கு வரை புலிகள் தங்களால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக் குடியமர வருமாறு அழைப்பு விடுக்கவில்லை.
அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதே அன்டன் பாலசிங்கம் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்களின் கருத்தாக வெளிப் பட்டிருந்தது. ஆனால் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனும் துணிச்சல் மிக்க தலைவனின் ஆட்சி யில் புலிகளின் வால் ஒட்ட நறுக்கப்பட்டு விட்டது. அவர்கள் முற்று முழுதான தோல்வியின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான சூழலில் வடக்கிலிருந்து விரட்டியடி க்கப்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் மீண்டும் அங்கே போய் மீளக்குடியமர்வதற்கான ஆவல் கொழுந்து விட்டெரியத் தொடங்கியுள்ளது. பலர் வடக்கே சென்று தமது காணிகள், வளவுகள், சொத்துக்களைப் பார்வை யிட்டும் வந்துள்ளனர். அத்துடன் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருக்கும் அமைச் சர் ரிசாத் பதியுதீனே இன்றைக்கு மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கின்றார்.
ஹக்கீம் வாய் வீச்சில் வல்லவர் என்றால், அமைச்சர் ரிசாத் ஒரு செயல் வீரன். அவருக்கு உதவ, துணை புரிய அமைச்சர் அமீர் அலி தயாராக இருக்கின்றார். இருவருமாகச் சேர்ந்து மூதூரில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் களை ஒரு மாத காலத்துக்குள் மீளக்குடியமர்த்தி சாதனை புரிந்தவர்கள், அவர்கள் இருவருமாக முயன் றால் வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு விடும்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அதற்கென விரைவான நட வடிக்கைகளை முடுக்கி விடுவார். அதற்கும் மேலாக ஜனாதிபதியின் அனுசரணையும் அந்த முயற்சிக்கு குறைவின்றிக் கிடைக்கும். ஏனெனில் வடக்கு முஸ்லி ம்களை மீளக்குடியமர்த்துவதை தனது தேர்தல் வாக் குறுதிகளில் ஒன்றாக, மஹிந்த சிந்தனையின் பிரதான அம்சங்களில் ஒன்றாக அவர் வாக்களித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேறி விட்டால் அது புலிகளைப் பொறுத் தவரை குப்புற விழுந்த கதையாகிவிடும். எனவே, அவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்டவே அக்குரஸ்ஸைத் தற்கொலைத் தாக்குதலை புலிகள் ஏவி விட்டனர்.
அதுவும் முன்பு போல வடக்கு மற்றும் கிழக்கின் முஸ்லிம் கிராமங்களுக்குள் புகுந்து புலிகள் தாக்குதலொன்றை மேற்கொள்வதென்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயமாகும். அதற்காகவே தான் அக்குரஸ்ஸையில் வைத்து தாக்கு தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன் மூலமாக வடக்கில் மீளக்குடியமர முற்படும் முஸ்லிம்களை அச்சுறுத்திப் பயமுறுத்தி வைக்கலாம் என்பது புலிகளின் எதிர்பார்ப்பாகும்.
அத்தோடு தற்கொலைத் தாக்குதலின் போது அமைச்சர்களை பொதுமக்கள் அதிகளவில் உயிரிழக்க வேண்டும் என்பது புலிகளின் நோக்கமாக இருந்த காரணத்தினாலேயே தற்கொலையாளியைத் தாண்டி அமைச்சர்கள் செல்லும் வேளையில், தாக்குதல நடத்தப்படாமல் பின் வரிசையில் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. மேலும் தாக்குதலின் போது அமைச்சர்கள் யாரும் கொல்லப்பட்டால் அதனையும் ஒரு பிரசார நன்மையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் புலிகள் திட்டமிருந்தனர்.
எனவேதான் புலிகளின் நோக்கத்துக்கு ஒத்துப் போகும் வகையில் சம்பவம் பற்றி தான் வெளியிட்ட அறிக்கை மூலமாக ஹக்கீம் அரசாங்கத்தை குறை கூறினார். அரசாங்கம் தேசிய மீலாத் விழாவை அரசி யல் மயப்படுத்தியதன் விளைவாகவே புலிகள் தற் கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாக விடயத்தைத் திசை திருப்ப முயற்சித்துள்ளார். எனவே, அரசாங் கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வடக்கில் முஸ்லிம்கள் மீளக்குடியமர்ந்தாலும் புலிகளைப் பொறுத்தவரை அது ஒரு அரசியல் மயமான விடயமாகவே கருதப்படும்.
அதன் காரணமாக அவர்கள் மீள்குடியேற முற்படும் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற் கொள்ளக் கூடும். ஆகவே, புலிகள் அனுமதிக்கும் வரை அவ்வாறான முயற்சிகளில் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது. அதிலும் அரசாங்கத்தின் மீது அடியோடு நம் பிக்கை வைத்தலாகாது என்பதை வலியுறுத்துவதற் காகவும் அவர் அவ்வாறு அரசாங்கத்தை குற்றம் சாட்ட முயற்சித்துள்ளார்.
இதே ஹக்கீம் தான் கனடாவிலிருந்து வெளிவரும் புலிசார்பு பத்திரிகையான பரபரப்பு வீக்லியின் 21.12.2007 ஆம் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக் குழுக்கள் இருப்பதான புலிகளின் அபாண்டமான பிரசாரத்தை ஆமோதிப்பது போன்று கருத்து வெளியிட்டுள்ளார். இவற்றிலிருந்து ஹக்கீமின் பின்புலம் என்னவென்பது தெளிவாகின்ற தல்லவா?
இப்படியான நிலையில் தான் ஹக்கீம் மேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை 1னிrஜி{மி!w. ஏனெனில் முன்பை விட மேல் மாகாண முஸ்லிம்கள் மத்தியில் இப்போது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ஒரு கசப்புணர்வு மேலோங்கி வருகின்றது. இதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வாக்களித்த போதும், மேல் மாகாண முஸ்லிம்களின் நலன் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை.
குறைந்த பட்சம் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பின் போது மாவ ட்ட அபேட்சகர் பட்டியலின் தலைமை அல்லது துணைத் தலைவர் பதவியாவது எந்த ஒரு முஸ்லிமுக்கும் வழங்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் முஸ்லிம்கள் படிப்படியாக ஓரம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மறுபுறத்தில் அரசாங்கம் முஸ்லிம்களின் விடயங் களில் கரிசணையுடன் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றது. அதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி யின் பழம்பெரும் முஸ்லிம் தலைவரான அமைச்சர் எம். எச். முஹம்மத் அவர்கள் கூட ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். எனவே, இம்முறை மேல் மாகாண முஸ்லிம்களின் வாக்குகள் பெருமளவில் ஆளுங் கட்சிக்குக் கிடைக்கப் போகின்றன. அதனை தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடாது தனித்துப் போட்டியிடுவது தான் வசதியாக இருக்கும். அப்போதுதான் மார்க்கத்தின் பேரால் வாக்குகளைப் பிரித்து ஆளுங்கட்சிக்கான முஸ்லிம்களின் ஆதரவை குறைக்க முடியும் என்பது ஹக்கீமின் திட்டமாகும்.
ஆனால், மேல் மாகாண முஸ்லிம்கள் ஒரு போதும் ஹக்கீமின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கப் போவதில்லை. குறைந்த பட்சம் அக்குறஸ்ஸை படுகொலைச் சம்பவம் புலிகளின் மலேச்சத்தனமான செயல் என்று கண்டனம் தெரிவிக்கவே தயங்கும் ஒரு போலி அரசியல் தலைவனை நம்பி ஏமாற மக்கள் இனியும் தயாராக இல்லை.
அது போன்றே ஹக்கீம் மட்டுமன்றி பாசிசப் புலிகள் மற்றும் ஏகாதிபத்திய அடிமைகளான ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆகியோர் எத்தனை சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பில் கொண்டிருக்கும் விசேட கரிசனையை யாராலும் மாற்ற முடியாது. இது மஹிந்த சிந்தனை அரசாங்கம். அதன் அர்த்தம் மனிதாபிமான அரசாங்கம். மற்றபடி இது ஒன்றும் பாசிசப் புலிகளின் தாளத்திற்கேற்ப ஆடும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமல்ல...
ஆர். எப். அஷ்ரப் அலீ
0 விமர்சனங்கள்:
Post a Comment