அதிகாரப் பகிர்வு ஆரம்பம்? பொலிஸ் நிர்வாகத்தில் மாற்றம்
மோதல்கள் முடிவடைந்துவரும் நிலையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பகிர்ந்தளிக்கப் போகின்றதா என்ற கேள்வி பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் தோன்றியுள்ளன. மோதல்கள் முடிவடையும் தறுவாயிலிருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
திடீரென பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றிய பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, புதிய சுற்றுநிருபத்துக்கமைய சிரேஸ்ட பிதிப் பொலிஸ்மா அதிபர்களை தமக்குரிய மாகாணங்களிலேயே அலுவலகங்களை அமைத்துப் பணியாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு திடீரென நிர்வாக மாற்றம் செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையென சுட்டிக்காட்டப்படுகிறது.
ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்பட்டிருந்தபோதும், அவர்கள் பொலி;ஸ் தலைமையகத்திலிருந்தே பணியாற்றி வந்தனர். எனினும், தம்மை சொந்த மாகாணங்களிலேயே அலுவலகங்களை அமைத்துப் பணியாற்றுமாறு பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மாநிலங்களில் கையாளப்படுவதைப் போன்றே இங்கும்; பொலிஸ் நியமனங்;கள் அமையவிருப்பதாக அவர் கூறியுள்ளார். மோதல்கள் முடிவடையும் நிலையிலிருப்பதால் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சும் அடிபடுவதாகக அந்தப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் தற்பொழுது 10 சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மூவர் தலைமையகத்தில் பணியாற்றுவதுடன், ஏனைய ஏழு பேரும் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பாக நியமிக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்ட மூலத்துக்கும்; அப்பால் தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென இந்தியா இலங்கைக்குத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையிலேயே பொலிஸ் நிர்வாகத்தில் இவ்வாறானதொரு மாற்றம் நடைபெற்றுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment