இரகசியம் பேணும் 300 வருட வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவரும் சுவிஸ் வங்கிகள்
தனிப்பட்ட செல்வந்தர்களும் கம்பனிகளும் இனிமேல் தமது பணத்தை சூரிச் வங்கிக் கணக்குகளில் இரகசியமாக வைத்திருக்க முடியாது.
வங்கிக்கணக்குகள் தொடர்பாக கேள்விகள் கேட்கக் கூடாது என்ற சகாப்தத்தை சர்வதேச அழுத்தத்தை அடுத்து முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது சுவிற்சர்லாந்து.
லைச்ரென்ஸ்ரீன், லக்ஸ்சம் பேர்க் அன்டோரா ஆகிய வங்கிகள் வெளிநாட்டு அரசாங்கங்களின் கணக்குகள் தொடர்பான கோரிக்கையையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தகவல்களை வெளியிட இந்த வாரம் இணங்கியுள்ளன. இதன் மூலம் 300 வருடகாலம் பேணிக்கடைப்பிடிக்கப்பட்டு வந்த வங்கி இரகசியம் முடிவுக்கு வருகின்றது.
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் சந்திப்பின்போது வரி ஏய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் முயற்சிகளில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் திட்டமிட்டிருக்கும் நிலையில் சுவிஸ் வங்கிகளின் இந்த நடவடிக்கையானது சடுதியான வாய்ப்பாக அமையுமென கருதப்படுகிறது.மிகவும் நெருக்கடியான விடயமாகியுள்ள உலக பொருளாதார பின்னடைவை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக சசெக்கிலுள்ள ஹோர்சாமில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஒன்று கூடி ஆராயவுள்ளன. உலக பொருளாதார நெருக்கடியானது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கடும் விரிசலை ஏற்படுத்தி வருகின்றது.
வைத்திருக்கும் சொத்தின் பெறுமதியிலும் பார்க்க குறைவான வரியாக செல்லுத்துவது தொடர்பான விவகாரத்தில் ஜி20 மாநாட்டில் இணக்கப்பாடு எட்டப்படும் சாத்தியம் உள்ளது.
தனிப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களில் வங்கிக்கணக்கு தொடர்பாக ஏனைய நாடுகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதாக சுவிற்சர்லாந்து நாடு தெரிவித்துள்ளது. ஆனால், ஒவ்வொறு கோரிக்கைக்கும் இணங்க முடியாதென அந்நாடு தெரிவித்துள்ளது. இதனை துரிதமாக மேற்கொள்ள முடியாது என்று சுவிற்சர்லாந்தின் நிதியமைச்சர் ஹான்ஸ் ருட்லொங் கூறியுள்ளார். வங்கி இரகசியத்தை பேணுவது சுவிசர்லாந்தின் குற்றவியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் வங்கிகளுக்கு சிறைத் தண்டனை உள்ளது.சுவிஸின் சமஷ்டி பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானமானது பல செல்வந்த வாடிக்கையாளர்களுக்கு கவலையளிக்கும் விடயமாகும்.
இதுவொரு பாரியமாற்றம். இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்தபின் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றமாக இது உள்ளது. வங்கி இரகசியம் தொடர்ந்து பேணப்படும் என்று சுவிஸ் கூறுகிறது. இதில் ஒரு பகுதியே உண்மை என்று வைதர்ஸ் நிறுவனப் பங்குதாரரான ஜே.கிரோஸ் என்பவர் லண்டன் ரைம்ஸுக்கு கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment