நாய்க்குட்டிகளைப் பராமரிக்கும் சேவல்
சீனாவில் மாஜியாகியாவோ என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காவோ பென்ஜியிங். இவர் வீட்டில் வளர்ந்து வரும் சேவல் ஒன்று அதே வீட்டில் இருந்த நாயுடன் சிநேகிதமாக இருந்தது.
அந்த நாய் சமீபத்தில் 2 குட்டிகளை போட்டது. அதற்கடுத்த 10 நாட்களில் அதை யாரோ விஷம் வைத்துக் கொன்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அந்த நாய்க்குட்டிகளும் இறந்துவிடும் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இறந்துபோன நாயின் சிநேகிதனான சேவல் அந்த நாய்க் குட்டிகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. யாரும் அந்தக் குட்டிகளை நெருங்கிவிடாமல் அந்தச் சேவல் பார்த்துக் கொள்கிறது. தீனியை முதலில் குட்டிகளை தின்றுவிட்டு பிறகுதான் அது தின்கிறது. குட்டிகளுக்கு வைத்து இருந்த உணவை சில கோழிகள் திருடித்தின்ன முயன்றபோது அந்த சேவல் அதற்கு அனுமதிக்காமல் அவற்றுடன் சண்டை போட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment