37 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் முடக்கம்:
புலிகளுக்குப் பாரிய இழப்பு; ஆயுதங்களும் மீட்பு
புதுக்குடியிருப்பில் புலிகளின் எஞ்சியுள்ள பிரதேசத்தை விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் வேகமாக முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் 37 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் புலிகளை முடக்கிவிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகளின் இலக்குகள் மீது படையினர் தொடர்ந்தும் கடுமையாக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இதனால் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தின் இரண்டு படைப் பிரிவுகளும், அதிரடிப் படையினரும் கள முனையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தின் 55வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலை மையிலான குழுவும், இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான குழுவினரும் புதுக்குடியிருப்பு வடக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்.
இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் இவர்களுக்கு உதவியாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் நேற்றைய தினமும் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, குப்பிளான் பிரதேசத்தில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது ரி-56 ரக துப்பாக்கிகள்-03, ரி-81 ரக துப்பாக்கிகள்-02, சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்து 200 கிராம், கைக்குண்டுகள்- 03, துப்பாக்கி ரவைகள்- 210 மற்றும் ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment