இழப்புக்கள் தொடர்பான விபரத்தை வெளியிட ஜோன் ஹோல்ம்ஸ் மறுப்பு
இலங்கை இழப்புக்கள் தொடர்பான விபரத்தை வெளியிட ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் மறுத்துள்ளார்.
இழப்புக்களின் எண்ணிக்கை குறித்து தமது சொந்த முயற்சியால் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், எனினும், இவற்றினை சரியானதா என்பதை நிச்சயப்படுத்திக் கூறமுடியாதென ஜோன் ஹோல்ம்ஸ் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு சர்வதேச நிதியுதவி வழங்கப்படுகிறதாவென ஜோன் ஹோல்ம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ள இன்னர் சிற்றி பிரஸ், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு ஐக்கிய நாடுகள் நிதியுதவி வழங்குதை ஹோல்ம்ஸ் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டது.






0 விமர்சனங்கள்:
Post a Comment