திருகோணமலை மற்றும் மூதூருக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம்
20 வருடகாலமாக தடைப்பட்டிருந்த திருகோணமலை மற்றும் மூதூருக்கும் இடையிலான கப்பல் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கின் உதயம் செயற்றிட்டத்திற்கு அமைவாக, இந்தக் கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக திருகோணமலை துறைமுக அதிகாரசபையின் வதிவிட முகாமையாளர் நிமல் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சேவை 2 என்ற கப்பல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதால் பயணிகளுக்கு மேலதிக சேவைகளை வழங்கமுடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர், சிறிய படகொன்று போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் நிமல் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். இந்தக் கப்பல் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, பலர் திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment