இந்திய மருத்துவக் குழு சேவைக்காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: இந்திய உயர்ஸ்தானிகர்
இந்திய மருத்துவக் குழுவினர் தமது சேவைக்காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்குச் சென்றிருக்கும் இந்திய மருத்துவக் குழுவினரை சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று புதன்கிழமை சந்தித்துள்ளார்.
இதன்போது, 70 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நிமால் சிறிபால டி சில்வாவிடம் அலோக் பிரசாத் கையளித்தார். இந்த சந்திப்பின்பேர்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அத்துல ஹாந்தலியனகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment