வட இலங்கையில் பொதுமக்கள் மேலும் முப்பது பேர் பலி என்கிறார் மருத்துவர்
வட இலங்கையில் அரச படையினர் விடுதலைப் புலிகள் இடையில் மோதல்கள் நீடித்துவரும் நிலையில் மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது பற்றி புதிய தகவல்கள் வந்துள்ளன.
புதன் கிழமை நடந்த ஷெல் வீச்சில் பாதுகாப்பு வலயம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் மேலும் முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் செயலாற்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் நானூறு பேருக்கும் அதிகமானவர்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கும் காயமடைந்தமைக்கும் தாங்கள் பொறுப்பு அல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் தரும் அழுத்தம் காரணமாக மருத்துவர்கள் பொதுமக்கள் பாதிப்பு பற்றி மருத்துவர்கள் பெரிதுபடுத்திக் கூறுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது.
BBC தமிழ்






0 விமர்சனங்கள்:
Post a Comment