58வது படையணி இரணைப்பாலை சந்தியை அடைந்தது
58வது படையணி சேர்ந்த 20வது கஜபா படைப் பிரிவினரும் 7வது சிங்கப் படைப் பிரிவினரும் 11வது இலகு காலாற்படையினரும் இணைந்து புதுகுடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் புலிகளை மேலும் மிகச்சிறிய ஒரு நிலப்பகுதிக்குள் முடக்கியுள்ளனர்.
இரணைப்பாலை பகுதியை புலிகள் படையினரிடம் இழந்து வரும் சூழலில் அவர்கள் `யுத்த சூனிய` பிரதேசம் நோக்கி பின் நகர்ந்து சென்றுள்ளனர். சர்வதேச யுத்தகால நியமங்களுக்கு எதிரான புலிகளின் இவ்வாறான நடவடிக்கை, யுத்த சூனிய பிரதேசத்தில் இருக்கும் பொது மக்களின் பாதுகாப்பை மென்மேலும் அச்சுருத்தலுக்கும் ஆபத்துக்கும் உள்ளாக்கும் செயலாகுமென கொழும்பு பத்திரிகையாளரொருவர் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment