இந்தியாவினதும், அமெரிக்காவினதும் உதவியை இலங்கை மறுத்துள்ளது
வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டத்திற்காக இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியை இலங்கை நசூக்காக மறுத்துள்ளது.
இது குறித்து அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்த பிரித்தானியாவின் கொன்ஸவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்; லியாம் பொக்ஸிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்திருப்பதாக இந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது ஏனையோரின் உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் இருப்பதுடன், வடக்கை மீட்ட பின்னர், அந்தப் பகுதிக்கான அரசியல்க்கட்டமைப்பு அடுத்த 3 மாதங்களுக்குள் முன்வைக்கப்படவேண்டிய தேவையிருப்பதாக ரோஹித்த போகல்லாகம கூறியதாகவும் இந்துப் பத்திரிகை தெரிவித்தது.






0 விமர்சனங்கள்:
Post a Comment