ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநதிகள் குழுவொன்று இலங்கை வருகிறது
மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளின் உண்மை நிலைவரங்களைக் கண்டறியும்பொருட்டு, விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளது.
இலங்கையில் மோதல்களால் பொதுமக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நேற்றுக் கலந்துரையாடியிருந்தனர்.
சுமார் ஒரு இலட்சத்து 70ஆயிரம் பொதுமக்கள் மோதல்ப் பகுதியில் சிக்கியிருப்பதுடன், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லையெனவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment