ஐரோப்பிய ஒன்றியத்தின் போர்நிறுத்தக் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை
இலங்கையில் உடனயாக யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கும் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது.
வன்னிப் பகுதியிலிருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் அனுமதியளிக்கவேண்டுமெனவும் மோதல்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், இந்தக் கோரிக்கையை மறுத்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, விடுதலைப் புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் யுத்தநிறுத்தத்திற்கு உடன்படுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லையெனக் கூறினார்.
விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கெஹண, 25 வருடகால மோதல்களில் இராணுவத்தினர் வெற்றியடைந்திருப்பதாகவும், படையினர் விரைவில் பொதுமக்களை விடுவிப்பார்களெனவும் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment