மக்களுடன் வெளியேறி வந்த 65 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரண்
முல்லைத்தீவில் இருந்து சென்ற பொதுமக்களுடன் வவுனியாவுக்கு சென்ற புலி உறுப்பினர்கள் 65 பேர் ஒமந்தையில் மேற்கொள்ளப்படும் ஆரம்ப விசாரணைகளின் பின்னர், புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
2,169 பேர் புதுக்குடியிருப்பு, சுண்டிக்குளம் மற்றும் ஒமந்தைக்கு நேற்று சென்றதாகவும் இவர்களுடன் சென்ற 65 புலி உறுப்பினர்களிடம் ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏனையோர் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்தில் இருந்து வெளியேறிய 48,611 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக படையினர் கூறியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment