உலகின் முதலாவது பறக்கும் கார்
உலகளாவிய ரீதியில் வீதி நெரிசல் என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்று உலகின் முதலாவது பறக்கும் காரை உருவாக்கி வெற்றிகரமாகப் பரீட்சித்துள்ளது.
மஸாசுஸெட்ஸில் வொபேர்ன் எனும் இடத்திலுள்ள தெர்ராபுஜியா டிரான்ஸிஷன் என்ற நிறுவனமே இந்த அரிய காரை உருவாக்கியுள்ளது.
ஒருவர் மேற்படி பறக்கும் காரில் வீதியில் சென்று கொண்டிருக்கும் போது வாகன நெரிசலை எதிர் கொள்வாராயின், அக்காரிலுள்ள ஒரு சில பொத்தான்களை மட்டும் அழுத்தி 30 செக்கன்களில் அக்காரை பறக்கும் காராக மாற்றி வானில் பறந்து செல்ல முடியும்.
இக்காரின் எரிபொருள் தாங்கியிலுள்ள எரிபொருளைப் பயன்படுத்தி மணிக்கு 115 மைல் வேகத்தில் தொடர்ந்து 450 மைல்கள்பறக்க முடியும். மேலதிக தூரத்துக்கு பயணிப்பதாயின் எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை நிரப்பிக் கொண்டால் போதுமானது.
இந்த பறக்கும் கார் பரீட்சார்த்த முயற்சியா னது அமெரிக்க விமானியான கேணல் பில் மெரிரால் மேற்கொள்ளப்பட்டது. அவர் நியூயோர்க்கின் பிளட்ஸ்பேர்க் விமான நிலையத்தின் அருகே 37 செக்கன்கள் பறந்தார்.
பறக்கும் காரில் பறந்த அனுபவம் குறித்து பில் மெரிர் விபரிக்கையில், ""இதமான விமானமொன்றில் பறந்த உணர்வு ஏற்பட்டது என்று கூறினார்.
இந்தக் காரை இவ்வருட இறுதிக்குள் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மேற்படி கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி கார்ல் டைட்றிச் தெரிவித்தார். எனினும், இக்காரைச் செலுத்துவதற்கு சாரதி அனுமதிப்பத்திரத்துடன் விமானி அனுமதிப்பத்திரமும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment