இவர்கள் இனியாவது மக்களுக்காகப் பேசவேண்டும்
வன்னி இராணுவ மோதல் பிரதேசத்தி லிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளு க்கு வரும் பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.
இந்த நிவாரணக் கிராமங்களில் அவர்களுக்கான அத்தியாவசிய தேவை கள் அனைத்தும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. தண்ணீர் மற்றும் மலசல கூட வசதி முதல் வங்கி, தபால் நிலை யம் எனப் பல வசதிகளை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். பல குடும்பங்க ளின் உறுப்பினர்கள் ஒருவர் இருக்கு மிடம் மற்றவருக்குத் தெரியாதவாறு பிரிந்திருந்தனர். அவர்களையெல்லாம் தேடிப் பிடித்து குடும்பத்தின் மற்றைய உறுப்பினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது பல குடும்பங்கள் முழுமை யான குடும்பங்களாக அங்கு வாழ்கி ன்றன. ஒவ்வொரு குடும்பமும் தனித் தனியாகச் சமைத்து உண்பதற்கான வசதிகளும் நிவாரணக் கிராமங்களில் உள்ளன. கட்டுப்பாட்டு விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும். இதைவிட, பல பிரதேசங்க ளிலிருந்து பொதுமக்களும் அத்தியா வசிய பொருட்களைச் சேகரித்து இவர் களுக்கு வழங்குகின்றார்கள்.
இடம்பெயர்ந்து வந்த மாணவ மாணவிகள் தங்கள் கல்வியைத் தங்கு தடையின்றித் தொடர முடிகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த காலத்தில் இவர்களுக்கு இந்த வசதி இருக்கவில்லை. அங்கே கல்விச் செயற் பாடுகள் அடிக்கடி தடைப்பட்டன. ஆயுதப் பயிற்சிக்காக மாணவர்கள் கூட்டிச் செல்லப்படுவது நாளாந்த நிகழ்வாக இருந்தது. இடம்பெயர்ந்து வந்தவர்க ளுக்குச் சீரான வைத்திய சேவையும் வழங்கப்படுகின்றது. வைத்தியர்களும் தாதிமாரும் அங்கு தங்கியிருந்து பணி புரிகின்றார்கள்.
இவ்வளவு வசதிகளும் உள்ளபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலை வர்கள் எதிர்மறைப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். நிவாரணக் கிராமங்க ளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று இவர்கள் செய்யும் பிரசாரம் அப்பட்டமான பொய் என்பதை இவர்க ளைச் சேர்ந்த ஒருவரே இப்போது வெளிப்படுத்தியிருக்கின்றார்.
நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோத ராதலிங்கம் நேற்று முன்தினம் பாராளு மன்றத்தில் கூறினார். முல்லைத் தீவில் உறவுகளைப் பிரிந்து வாழ்ந்தாலும் முகாம் களுக்குள் அச்சமின்றியும் நிம்மதியாகவும் வாழ்வதாக அம்மக்கள் கூறுகின்றார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் கூறினார். இவர் கூறுவதுதான் உண்மையான நிலை.
கூட்டமைப்புத் தலைவர்கள் புலிகளின் முகவர்களாகச் செயற்படுவதாலேயே பொய்யான பிரசாரத்தை மேற்கொள்கின் றார்கள். சிவிலியன்களை வெளியேற விடாது புலிகள் தடுத்து வைத்திருக்கின் றார்கள். அதை நியாயப்படுத்துவதற்கான பிரசாரமே இது. வெளியேறி வந்தவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்று பிரசாரம் செய்வதன் மூலம் இரண்டு நோக்கங் களை நிறைவேற்ற இவர்கள் முயற்சிக்கி ன்றார்கள். மோதல் பிரதேசத்தில் தங்கியி ருக்கும் மக்கள் வெளியேறாமல் தடுப் பது ஒரு நோக்கம். அம்மக்கள் வெளியேறு வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் புலிகள் மீது அழுத்தம் பிரயோகிப்பதைத் தவிர்ப்பது மற்றைய நோக்கம்.
புலிகள் சிவிலியன்களைத் தடுத்து வைத் திருப்பதற்கு உதவும் வகையிலேயே கூட்டமைப்புத் தலைவர்களின் பிரசாரம் அமைந்துள்ளது. உண்மையிலேயே துன் பம் அனுபவிப்பவர்கள் புலிகளால் பல வந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களே. கூட்டமைப்பினர் புலிகளு க்காகப் பேசுவதை விட்டு இனியாவது மக்களுக்காகப் பேசவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment