700 ஆண்டுகளின் முன் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யுவதிக்கு இறுதிச் சடங்கு
700 வருடங்களுக்கு முன் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இனங்காணப்படாத யுவதியொருவரின் சடலம், உரிய இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பிரித்தானிய ஹென்ட் நகரில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ரோசெஸ்டர் நகருக்கு அண்மையிலுள்ள ஹுசென் வெர்பேர்க் பாரிஷ் தேவாலயத்துக்கு அண்மையிலுள்ள நிலத்தில் பூகற்பவியல் ஆராய்ச்சியின் போது இந்த யுவதியின் சட லம் கண்டெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக நத்தார் மரமாக மேற்படி தேவாலயத்தை அலங்கரித்து வந்த மர மொன்றின் அருகே இந்த யுவதியின் எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டமையால், அவை புனித மிக்கவையாக கருதப்பட்டன.
இந்நிலையில் யுவதிக்கான இறுதிச் சடங்கில் 200 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யுவதியின் எச்சங்கள் தேவாலயத்தின் பிரதான மயானத்தில் புதைக்கப்பட்டன.
0 விமர்சனங்கள்:
Post a Comment