450 வருடங்களுக்கு முன் இறந்த கணித மேதைக்கு தொலைக்காட்சி கட்டணத்தை செலுத்தும்படி எச்சரிக்கை கடிதம்
450 வருடங்களுக்கு முன் மரணமடைந்த கணித நிபுணர் ஒருவருக்கு தொலைக்காட்சி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் நெடுநாளாக செலுத்தப்படாது உள்ளதால் அதனை உடனடியாக செலுத்தும்படி எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்ட விசித்திர சம்பவம் ஜேர்மனி யில் இடம்பெற்றுள்ளது.
அடம்ஸ் றியஸ் என்ற கணித நிபுணர் 1525 ஆம் ஆண்டு குடியிருந்த வீட்டின் விலாசத்திற்கே மேற்படி எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1559 ஆம் ஆண்டு அடம்ஸ் றியஸ் மரண மடைந்த பிற்பாடு, 4 நூற்றாண்டுகள் கழித்து அவரைக் கௌரவப்படுத்தும் வகையில் அவர் வாழ்ந்த வீட்டில் கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
வானொலி மற்றும் தொலைக்காட்சி கண்டு பிடிப்பதற்கு பல நூற்றாண்டு கள் முன் வாழ்ந்த ஒருவருக்கு தொலைக்காட்சி கட்டணத்தை செலுத்தும் படி கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருப்பதைப் பார்த்து தாம் அதிர்ச்சியடைந்ததாக மேற்படி கழகத்தின் தலைவரான அன்னெக்ரெட் முன்ச் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment