தேவாலய கதிரை மெத்தையில் இயேசு கிறிஸ்துவின் முகம்
பிரான்ஸின் இந்து சமுத்திர தீவான றீயூனியலிலுள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில் மதகுருமாருக்கான கதிரையொன்றின் மெத்தையில் இயேசு கிறிஸ்துவின் முகம் காட்சியளிப்பதாக பரவிய செய்தியையடுத்து பல்லாயிரக்கணக்கானோர் அத்தேவாலயத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கிழக்கு சென்ட் அன்ட்ரேஸ் கம்பஸ்டன் மாவட்டத்திலுள்ள ஜீஸஸ் மிஸெரிகோர்டியஸ் தேவாலயத்திலேயே (Jesus-Misericordieux church) இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோன்றிய அற்புத காட்சி குறித்து அன்தோயினட் (Antoinette 82 வயது) என்ற பெண்மணி விபரிக்கையில், "இயேசு முகத்தை கதிரை மெத்தையில் கண்டதும் உணர்வு மேலீட்டால் தனது கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்ததாக கூறினார்.
"ஏ.எப்.பி.' சர்வதேச ஊடகத் திற்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு கூறினார்.
இது சம்பந்தமாக தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருவான டானியல் கவார்ட் (Daniel Gavard) விபரிக்கையில், "இது ஒன்றும் அபூர்வமான விடயமல்ல. இது கடவுளின் ஒரு சமிக்ஞை மட்டுமே'' என்று தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment