BBC செய்திப்பிரிவில் கடமை புரியும் இலங்கைத்தமிழன் அவமதிக்கப்பட்டுள்ளார்
இலங்கைத் தமிழராகிய ஜோர்ஜ் அலகையா (George Alagiah) பல வருடங்களாக BBC ல் கடமைபுரிந்து வரும் பணியாளர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
கடந்த திங்கட்கிழமை மாலை செய்தி (BBC 1's News at Six) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சுவீடன் நாட்டில் உள்ள புருவிக் மிருகசாலையில் (Furuvik Zoo) இருந்து விசமத்தனமான குரங்குகள் என்ற தலைப்பில் ஒரு வாலில்லாகுரங்கு (chimpanzee) கற்களைப்பொறுக்கி அதனை அங்கு வந்த நின்ற பார்வையாளர்கள் மீது எறிந்து கொண்டிருந்ததை அங்குள்ள BBC நிரூபர் கிறிஸ் ஏக்கின் (Chris Eakin) நேரடி ஒளிபரப்பாக விபரித்து விட்டு அங்குள்ள பார்வையாளர்களிடம் "உங்களால் எதாவது ஒரு உருவ ஒற்றுமையை பார்ர்க்க முடிகிறதா?" ("Can you see any likeness?") என்று கேட்டு விட்டு
அப்படியே உடனே ஜோர்ஜ் அலகையாவிடம் திருப்பி செய்தியை தொடரும்படி முடித்துள்ளார்.
இதனை சற்றும் எதிபாராத BBC நிலையத்திலிருந்த அழகையா ஆச்சர்யமடைந்து சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு சிரிப்பை வரவழத்து மிக வேகமாக அடுத்த தலைப்பிற்கு சென்றுவிட்டார்.
Chris Eakin
பின்னர் Chris Eakin, "நான் தூய்மையான இதயத்துடன் தான் இந்த செய்தி விபரணத்தை தெரிவித்தேன் மற்றும்படி நிச்சயமாக எதுவித உள்நோக்கமும் கொண்டிருக்கவில்லை, நானும் ஜோர்ஜும் பழைய நண்பர்கள், நான் இதன் மூலம் எதும் தவறு இழைத்திருந்தால் அதற்காக
மிகவும் வருந்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரது மன்னிப்பை அழகையா ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் இது ஒரு
எதிபாராததும், பொருத்தமற்ற நேரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் என்று கூறியுள்ளார்.
Carol Thatcher
சென்ற மாதம் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரட் தட்சரின் மகள் கரோல் தட்சர் BBC யில் நடைபெற்று வந்த The One Show நிகழ்ச்சியில், ஒரு பிரெஞ்சு நாட்டு டென்னிஸ் வீரர் Jo-Wilfried Tsonga வை ஒரு கருப்பு பொம்மையாக ("Golliwogg") வர்ணித்ததால் உடனடியாக BBC கரோல் தட்சரை பணியில் இருந்து பணிநீக்கம் செய்தது.
Golliwogg and the French tennis player
ஆனால் இதற்கு ஏன் BBC எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை?
0 விமர்சனங்கள்:
Post a Comment