வன்னி மக்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகலாயக் குழு நேரில் சென்று பார்வை
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரிநிலையத்திற்கு பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் குழுவினர் நேற்றுமுன்தினம் விஜயம் செய்தனர்.
வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து ஆராயும் பொருட்டு இவர்களின் விஜயம் அமைந்திருந்ததாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் தெரிவித்தார். மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை தற்காலிகமாக குடியமர்த்த அமைக்கப்பட்டுவரும் நிவாரண கிராமங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்தனர்.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து வடமாகாண ஆளுநர், மாவட்ட அதிபர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் குழுவினருக்கு விளக்கினார்கள்.
இதேவேளை, சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடுத்தவாரம் வவுனியா செல்லவுள்ளார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு இவர் செல்லவுள்ளார். வடபகுதி அபிவிருத்தி செயலணியின் தலைவர் என்ற வகையில் இவர் வவுனியாவில் உள்ள அனைத்து திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு படையினர், மதத்தலைவர்கள், கிராமிய தலைவர்கள், ஆலய பரிபாலனசபையினர்,விளையாட்டு கழக பிரதிநிதிகள், தொழிற்சங்க முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment