புலிகளின் மோசமான மக்கள் விரோதச் செயல்
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதிக்கு உணவுப் பொருட் களை எடுத்துச் சென்ற கப் பல் மீது புலிகள் மோட் டார் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்.
உலக உணவு ஸ்தாபனத்தின் அனுசரணை யுடன் 500 மெட்ரிக் தொன் உணவுப் பொரு ட்களுடன் சென்ற கப்பல் புதுமாத்தளன் கடற்பரப்பில் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கையிலேயே புலிகளின் மோட் டார் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. மோட்டார் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் 140 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் இறக்கப்பட்டிருந்தன. புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து கப்பல் நடுக் கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
புதுமாத்தளன் பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களுக்காகவே இவ்வளவு உணவுப் பொருட்களும் அனுப்பப்பட்டன. இப் பொருட்கள் முழுவதையும் புதுமாத்தள னில் இறக்குவதற்கு முடிந்திருந்தால் அப் பகுதியிலுள்ள தமிழ் மக்களே அதனால் பலனடைந்திருப்பார்கள். தமிழ் மக்களு க்காக ஆயுதம் ஏந்தியதாகக் கூறும் புலிகள் தமிழ் மக்களின் பாவனைக்காக உணவுப் பொருட்களைக் கொண்டுவந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் மோசமான மக்கள் விரோதச் செயல். கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப் பட்டுவரும் பிரசாரத்தின் பின்னணியில் இத்தாக்குதலைப் பார்க்க வேண்டும்.
புதுமாத்தளன் பிரதேசத்தில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதா கப் புலிகளும் அவர்களுக்குச் சாதகமான வர்களும் கடந்த சில தினங்களாகப் பிர சாரம் செய்து வருகின்றார்கள். மக்கள் பட் டினியால் மடிந்ததாகவும் இவர்கள் பிரசா ரம் செய்தார்கள். பட்டினி மரணங்கள் சம் பவித்ததாக முல்லைத்தீவு அரசாங்க அதிப ருக்கு எழுத்து மூலம் அறிவித்த வைத்தியர் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலின் வெளித் தோற்றத்தைப் பார்த்தே அவ் வாறு அறிவித்தார் என்ற உண்மை அண் மையில் வெளியாகியது. உணவுத் தட்டுப் பாடு நிலவுகின்றதெனத் திட்டமிட்ட முறை யில் பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டதென்பதற்கு இது வலுவான சான்று.
இத்தனைக்கும் அரசாங்கம் அப்பகுதிக் குப் போதுமான உணவுப் பொருட்களைக் கடந்த காலங்களில் அனுப்பியிருந்தது. இப் பொருட்கள் மக்களைச் சென்றடையவில் லையென்றால் அவற்றுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுகின்றது. புலிகள் அப் பொருட்களைத் தாங்கள் எடுத்துக் கொண்டு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக் குகின்றார்கள் என்ற அபிப்பிராயம் அரசாங்க வட்டாரங்களில் நிலவுகின்றது. அரசாங்கம் அப்பகுதிக்கு கட்டங்கட்டமாக அனுப்பிய உணவுப் பொருட்களின் அள வைப் பார்க்கும்போது இந்த அபிப்பிராய த்தில் உண்மை இருப்பதாகவே தோன்று கின்றது.
தாக்குதலுக்கு உள்ளாகிய கப்பல் 500 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றது. ஒரே நேரத்தில் இவ் வளவு தொகையான உணவுப் பொருட்கள் முன்னர் அனுப்பப்படவில்லை. இவ்வளவு பொருட்களையும் புதுமாத்தளனில் இறக்கி னால், உணவுத் தட்டுப்பாடு நிலவுவதா கப் பொய்ப் பிரசாரம் செய்வது சாத்தி யமற்றதாகிவிடும் என்பதாலேயே உணவுக் கப்பல் மீது புலிகள் தாக்குதல் நடத்தி யிருக்கலாம் எனக் கருதுவது தவறாகாது. தமிழ் மக்களின் பாவனைக்காகக் கொண்டு வரப்பட்ட உணவுப் பொருட்களைத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் இறக்குவதற் குத் தடையாகச் செயற்படுவதை வேறு விதத்தில் விளங்கிக்கொள்ள முடியாது.
இராணுவ நடவடிக்கைப் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் மக்கள் பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்கின்றா ர்கள் என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம், யுத்தநிறுத்தத்துக்கான அழுத்தத்தைச் சர்வதேச சமூகம் பிரயோகிக்கும் நிலையைத் தோற்றுவிக்கலாம் என்று புலிகள் கருது கின்றார்கள். அதற்காகச் செயற்கையான தட் டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் கள். உணவுக் கப்பல் மீது மேற்கொண்ட தாக்குதல் இந்த மக்கள் விரோதச் செயலை அம்பலப்படுத்துகின்றது.






0 விமர்சனங்கள்:
Post a Comment