கூட்டமைப்பின் ஒத்துழைப்பின்மையால் பிரச்சினையைத் தீர்க்கமுடியாதுள்ளது: ஜனாதிபதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால், இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு குறித்து தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஏசியன் றிபியூன் இணையத்தளமொன்றுக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ச்சியாக அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்டதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதி, இந்த நிலையில், எவ்வாறு தாம் அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து திட்டமிடுவதெனவும் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளை இடைநிறுத்தும் சாத்தியக்கூறுகள் இல்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment