வன்னி மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை: ஐ.சி.ஆர்.சி.
வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் தமது உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையேற்பட்டிருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னியிலிருந்து மக்கள் வெளியேறி வேறிடங்களுக்கு செல்வதால,; அவர்கள் தமது உறவினர்களைப் பிரிந்து வாழவேண்டியிருப்பதாகக் கூறிய செஞ்சிலுவைச் சங்கம், இதனால், நாட்டின் ஏனயை பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமது உறவினர்களுடன் தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
இந்த மக்கள் தமது உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கும், திரும்பவும்; அவர்களுடன் இணைந்து வாழ்வதற்குமான ஒழுங்குகள்; செய்துகொடுக்கப்படவேண்டுமெனவும் செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment