பிரபாகரன் இன்னமும் வன்னியில்: இராணுவம் தகவல்
விடுதலைப் புலிகளின் தலைவர் இன்னமும் வன்னியில் ஒழிந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தங்கியிருப்பதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே, பிரபாகரன் இன்னமும் வன்னியிலிருப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
“பிரபாகரன் இன்னமும் அங்கிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன” என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார்.
35 சதுரகிலோ மீற்றர் பரப்பளவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் சிக்கல்களை எதிர்நோக்குவதாகக் கூறிய உதய நாணயகார, புதுக்குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்தும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment