புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்கள்: ரணிலும் விசாரிக்கப்படலாம்
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட அதி நவீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த காலத்திலேயே இந்த நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள மற்றும் யுத்த உபகரணங்கள் எவ்வித சிரமமுமின்றி வன்னிப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுளளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் காமினி அபேரத்னவை (டெக்ஸி அபே) விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைக்கு உட்படுத்திய போதே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் விசாரணைக்குட்படுத்தப்படலாமெனத் தெரியவருகிறது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க இரு வாரகால விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment