இலங்கை மீதான யுத்தக் குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிடின் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முற்றுகையிடப்படும்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை, தனது குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிட்டால் கொழும்பிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தை இலட்சக்க கணக்கான மக்களுடன் சென்று சுற்றி வளைக்கப் போவதாக தேசிய சுதந்தி முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பிதெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்ற (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வாறான ஒரு குற்றச்சாட்டுட இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டானது யுத்தத்தை நிறுத்துவதற்கான ஒரு தந்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment