வாழ்வா, சாவா இதுதான் தமிழரின் இன்றைய நிலை
போராட்டத்தின் இறுதிக்கட்டத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். ஆமாம் தற்போதுதான் போராட்டம் எமது வீட்டின் கதவை தட்ட ஆரம்பித்திருக்கின்றது. நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை அவர்களே எல்லாம் வென்று தருவார்கள் என்ற மனநிலை ஓரளவிற்கு மாறியுள்ளது, என்றுதான் கூறவேண்டும்.
புலம் பெயர் தமிழர்களின் பரப்புரைப் போராட்டம் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் தற்போது இறுதிக்கட்டத்தில் போராளிகளின் கரங்களை நாம் பலப்படுத்தாவிட்டால் நமக்கு கிடைப்பது என்ன? ஓரளவு சிந்தியுங்கள்.... உங்களிடமே விடையுள்ளது.
பின்னடைவு, சிறிய பகுதிக்குள் முடங்கிவிட்டால், எல்லாம் முடங்கிவிட்டது என்று எண்ணுபவர்கள் பலர். ஆனால் அது உண்மையல்ல. இந்த நிலைக்கு யார் காரணம்?? கட்டாயமாக புலம் பெயர் தமிழ் மக்கள்தான். சமாதான காலத்தில் எம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை பாதுகாக்க எல்லைப்படையும், நவீன ரக ஆயுதங்களும் தேவையென எம்மை கேட்டபோது நாம் என்ன சொன்னோம்.
நோர்வே, யப்பான் மேலும் மேலத்தேய நாடுகளும் உங்களிற்கு (புலிகளிற்கு) அள்ளித்தருகிறார்கள். இனி எதற்கு ஆயுதம். ஒன்றும் தேவையில்லை. வன்னியின் வாயில் வளிமூலம் பெருமளவு நிதியைப் பெறுகிறீர்கள் என்று கூறி கையை விரித்து விட்டோம் நாங்கள்.
கிடைத்தது என்ன: பல தளபதிகளையும் போராளிகளையும் சமாதான காலத்தில் எதிரியின் கிளைமோர் தாக்குதலில் பலிகொடுத்தோம். அன்று நாம் எல்லைப்பாதுகாப்பு நிதியாக பணத்தை அள்ளி இறைத்திருந்தால் நாம் இவற்றை இழந்திருக்கவே மாட்டோம்.
கிழக்கு மாகாணம் முதற்கொண்டு கிளிநொச்சிவரை நிச்சயமாக இழந்திருக்கவே மாட்டோம். ஏற்கனவே நாம் விட்ட் வரலாற்றுத்தவறை மீண்டும் ஒரு முறை நாம் விடக்கூடாது.
சிங்களத்தின் தலைமையோ இனிமேல் காலங்களில் தமிழர் போராட்டமொன்றை ஆரம்பிக்கவே முடியாதபடி அழிப்போமென சூழுரைக்கின்றனர். எமக்கு இது, அவமானமாகப் படவில்லையா??
பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைக்க எம்மை வருத்தி மக்களையும், போராளிகளையும் மீட்க அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். உச்சக்கட்ட நிதியுதவியை வழங்குவதோடு நின்றுவிடாமல் எமது உறவுகள் விழாக்களில் உண்டியல்களை வைத்து நிதியை சேகரித்து போராளிகளின் கரங்களை வலுப்படுத்துவோம்.
இழப்புகளை அறிந்திருப்பீர்கள்.... அவைகளை அடியோடு எமது மண்ணிலிருந்து வெளியேற்ற ஒன்று திரள்வோம்.
சுவிஸிலிருந்து சிறி
16.03.09
மின் அஞ்சலில் கிடைக்கப்பெற்றது
0 விமர்சனங்கள்:
Post a Comment