இழந்த பிரதேசங்களை இருவாரத்தில் மீட்க போவதாக பொட்டம்மான் போலிப் பிரசாரம்
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவருடைய இயக்கமும் மீண்டும் தலைதூக்க முடியாத நிலையில் படுதோல்விகளைச் சந்தித்துள்ள நிலையிலும் அவ்வாறே அரசபடையினரிடம் அனைத்துப் பிரதேசங்களையும் இழந்துவிட்டு புதுக்குடியிருப்பில் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இதனால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் அவமானத்தைத் துடைப்பதற்காக புலிகள் இயக்கத் தலைவருக்கு அடுத்த உயர்மட்டத் தலைவராகிய பொட்டம்மான் சர்வதேச ரீதியில் போலிப் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்.
தற்போது புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியும் பேரிழப்புகளும் காரணமாக கனடா, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, நோர்வே, சுவிட்சர்லாந்து , அவுஸ்திரேலியா , இந்தியா மற்றும் பிரதான நாடுகளில் செயற்படும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியும் அவமானமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு வாழும் தமிழ் மக்களிடமிருந்து நிதி வசூலிக்க முடியாத, தலைகுனிவான நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால், அவர்களுடைய நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மட்டுமன்றி பிரசார நடவடிக்கைகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அத்துடன், புதுக்குடியிருப்பில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சக தலைவர்களும் எஞ்சியுள்ள புலிகள் இயக்கப் படையினரும் பதுங்கியிருப்பதும் தாக்குதல்களை நடத்துவது பற்றிய உண்மையான தகவல்கள் சர்வதேச நிறுவனங்கள் மூலமாக வெளிவந்துள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களுக்காக என்று கூறி வெளிநாடுகளில் நிதி சேகரிப்பதிலும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், படுதோல்விகளால் புலிகள் இயக்கத்துக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் இந்த அவமானத்தையும் பின்னடைவையும் நீக்கும் நடவடிக்கையாக புலிகள் இயக்கத்தின் இரண்டாம் தலைவர் பொட்டம்மான் போலியான சர்வதேசப் பிரசாரங்களை அவருடைய இணையத்தளங்கள் மூலம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
இந்தப் பிரசாரங்களில் பொட்டம்மான் கூறிவரும் தகவல்களுக்கேற்ப, ஸ்ரீலங்கா அரசபடையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் 70 வீதமான பிரதேசங்களைப் புலிகள் இயக்கத்தினர் மறுபடியும் மீட்டுவிட்டதாகவும் மீதமாக அரசபடையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் 30 வீதமான பிரதேசங்களில் பெரும் பகுதியையோ அல்லது முற்றிலுமோ இன்னும் இரண்டு வாரங்களில் புலிகள் இயக்கம் மீண்டும் கைப்பற்றுவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஈழவாதிகளுக்கு மன ஆறுதல் அளிப்பதற்காக "நிச்சயமாக இரண்டு வாரங்களில் அரசபடையினரை விரட்டியடித்து அவர்களிடம் எஞ்சியிருக்கும் எமது பிரதேசங்களை மீட்டு எடுப்போம். நாம் வெற்றி பெறுவோம். நாம் தமிழீழத்தை வென்றெடுப்போம்' என்று பொட்டம்மான் அவருடைய சர்வதேச இணையத்தளங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
திவயின தகவலும் விமர்சனமும் 15.3.2009
தினக்குரல்
0 விமர்சனங்கள்:
Post a Comment