இப்படியும் ஒரு சம்பவம்
வவுனியாவில் உள்ள இடம்பெயாந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்துகொண்டிருக்கையில் இன்றையதினம் சுவாரசியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை வவுனியா காமினி சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா,வழமைபோலவே உங்களது தேவைகள் பிரச்சினைகளை தயங்காமல் என்னிடம் கூறுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அப்போது எழுந்து நின்ற படத்திலுள்ள முதியவர் தான் வன்னியிலிருந்து தனியாக தப்பி வந்ததாக தெரிவித்ததுடன் தனக்கு 2 மனைவிகள், 24 பிள்ளைகள்,69 பேரப்பிள்ளைகள்,மற்றும் இறுதி ஸ்கோர் தெரியாத பூட்டப்பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
டக்ளஸ்தேவனந்தா, அந்த ஐயாவிடம் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என கேட்டபோது “நான் தனியாக தப்பி வந்துவிட்டேன்.வன்னியிலுள்ள எனது இரு மனைவிகள் பிள்ளைகள் எல்லாரையும் வன்னியிலிருந்து எடுப்பித்து என்னுடன் சேர்த்து வையுங்கள். (அவரது குடும்பத்திற்கே தனி ஒரு நலன்புரி நிலையம் வேண்டும்) என கேட்டுக்கொண்டார்.
அவருக்கு ஆறுதல் கூறிய டக்ளஸ்தேவனந்தா “வன்னியில் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தத நாட்கள் வெகுவிரைவில் உங்களுக்கு கிடைக்கும் என தெரிவித்ததுடன் எதிர்கால எம் தேசத்திற்கு உங்களைப் போன்றவர்கள் (பெருமளவு பிள்ளை குட்டிகளுடன்) தேவை” என பலத்த ஆரவாரத்தின் மத்தியில் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment