தமது பிடியில் உள்ள மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும். அவுஸ்திரேலிய வெளியுறவுத்துதுறை அமைச்சர் ஸ்டிபன் ஸ்மித் பகிரங்க கோரிக்கை
தம்மால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான தடைகளை நீக்கி புலிகள் பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய வெளியுறவுத்துதுறை அமைச்சர் ஸ்டிபன் ஸ்மித் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக விடுத்துள்ள விஷேட அறிக்கை ஒனறிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சிiனையை தீர்ப்பதற்கு ஏற்றுக்கொள்ளதகதக்க அரசியல் யோசனைகளை முன்வைத்து நாட்டின் மனிதாபிமான பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
பொதுமக்களின் சுதந்திரத்தை தடுப்பதற்கு எவ்வித நியாயங்களையும் தெரிவிக்க முடியாது என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளியுறவுத்துதுறை அமைச்சர்
புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இலங்கையில் மேலும் இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் அவர்களை தெளிவுப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்காக எவ்வித தாமதமுமின்றி ஏற்றுக் கொள்ளகூடிய அரசியல் மீளாக்கம் ஒன்றை முன்வைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த அரசியல் தீர்வானது இலங்கையர்கள் அனைவரினதும் அபிலாசைகளையும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் திடகாத்திரமான சூழ்நிலையையும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய வெளியுறவுத்துதுறை அமைச்சர் ஸ்டிபன் ஸ்மித் அவுஸ்திரNலிய அரசாங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment