புலிகள் சகல பொதுமக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும்
முன்நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப. நடேசன் விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
புலிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்க வேண்டுமாயின் புலிகள் தங்களின் பிடியிலுள்ள சகல பொது மக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
முன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப. நடேசன் லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியிருந்த பேட்டி தொடர்பாக வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-
புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்றோ சரணடைய வேண்டும் என்றோ இம்முறை நாங்கள் கேட்கப்போவதில்லை. ஏனெனில் அதைப் பற்றி எமக்கு கவலையில்லை.
நாம் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்று எமக்குத் தெரியும் நாம் பின்னர் அதனை பார்த்துக்கொள்வோம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment