மக்களை இலக்கு வைக்கும் புலிகளின் தாக்குதல்கள்
காயமடைந்த படை வீரரை ஏற்றிவந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் மீது பாதுகாப்புப் பிர தேசத்திலிருந்து புலிகள் நடத்திய ஏவு கணைத் தாக்குதல் யுத்த தர்மத்தை மீறிய செயல் மாத்திரமன்றி, எந்த மக்களின் பாதுகாவலர்களாகத் தங்களை இனங் காட்டினார்களோ அந்த மக்களுக்கு உயி ராபத்தை ஏற்படுத்தும் முயற்சியுமாகும்.
யுத்தம் நடைபெறும் போது எதிரி தரப்பு விமானத்தின் மீது தாக்குதல் நடத்து வது சர்வ சாதாரணமானது என்று அவர் கள் ஒருவேளை கூறலாம். காயமடைந்த வீரர்களை ஏற்றிவரும் விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவது சர்வ சாதாரணமா னதல்ல.
அவ்வாறான தாக்குதலை மேற் கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடு கள் சபையின் பிரகடனத்தில் சொல்லப்ப ட்டுள்ளது. இலங்கைத் தமிழர் விவகார த்தை ஐக்கிய நாடுகள் சபையில் விவாதி க்க வேண்டுமென வலியுறுத்தும் புலிகள் தாக்குதல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை மதிக்காமல் நடக்கின்றார்கள்.
இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான மோதலில் சிக்கிச் சிவிலியன்கள் பாதிப் புக்கு உள்ளாகக் கூடாது என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்புப் பிரதேசமொ ன்றைப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. இப்பிரதேசத்துக்குள் வருமாறு அரசாங் கம் மக்களுக்கு அழைப்பு விடுத்தது. இப்பிரதேசத்துக்குள் அரச படைகள் தாக்குதல் நடத்துவதில்லை.
ஆனால் சிவி லியன்களுடன் சேர்ந்து பாதுகாப்புப் பிர தேசத்துக்குள் நுழைந்த புலிகள் அங்கி ருந்து அரச படையினர் மீது தாக்குதல் தொடுக்கின்றார்கள். இரண்டு ஹெலி கொப்டர்கள் மீதான ஏவுகணைத் தாக்கு தலும் பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து புலி கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் அரச படையினரை இலக்கு வைப்பதாக மேலோ ட்டமான பார்வைக்குத் தெரிகின்ற போதி லும், உண்மையில் அவை அரசாங்கத் தின் அழைப்பை ஏற்றுப் பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வந்த மக்களையே இலக்கு வைக்கின்றன.
அரசாங்கம் பாதுகாப்புப் பிரதேசத்தை நோக்கிப் பதில்த் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டனேயே புலிகள் அங்கிருந்து தாக்குதல் தொடுக்கின்றார்கள். படையினர் பதில்த் தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் சிவிலி யன்கள் மோசமாகப் பாதிக்கப்படுவார் கள் என்பது புலிகளுக்குத் தெரியாதத ல்ல.
அதையே அவர்கள் விரும்புகின்றா ர்கள். சிவிலியன்களுக்குப் பாதிப்பு ஏற்ப ட்டால் சர்வதேச மட்டத்தில் அதைப் பிர சாரமாக்கி யுத்தநிறுத்தக் கோரிக்கையை நியாயப்படுத்தலாம் என்பது புலிகளின் நோக்கம்.
புலிகள் இப்போது தங்களின் இருப்புக் காகவே யுத்தம் புரிகின்றார்கள். தனிநாடு அமைப்பதற்கான யுத்தம் என்பதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. இப்போது அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள் வதற்காகவே போரிடுகின்றார்கள். தங்க ளின் இருப்புக்காக அப்பாவிப் பொதுமக் களைப் பலிக்கடாக்களாக்குவதை எவ் விதத்திலும் அவர்களால் நியாயப்படுத்த முடியாது.
தோல்வியைத் தவிர்க்க முடியாத கட்ட த்துக்கு வந்து விட்டார்கள் என்பது புலிக ளுக்கும் தெரியும். ஏதேனுமொரு விதத் தில் யுத்தநிறுத்தத்துக்கு வழிசெய்து தங்க ளைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கி ன்றார்கள். அது வரையில் மனிதக் கேட யங்களாகப் பொதுமக்களைத் தடுத்து வைத்திருக்கின்றார்கள். மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதாக இல்லை.
யுத்தநிறுத்தம் இடம்பெறுவதற்கான அறி குறிகள் சிறிதளவேனும் இல்லை. இந்த நிலையில் புலிகள் சரணடைவதன் மூலம் தங்களையும் காப்பாற்றலாம்; தங்களால் தடுத்து வைக்கப்பட்டுப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களையும் காப்பாற்ற லாம்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment