தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தவறு புரிகின்றது
சமகால அரசியல் நிலைமை பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு பாரிய தவறைச் செய்திருக்கின் றது. கூட்டமைப்புத் தலைவர்கள் ஏற்கனவே விட்ட தவறுகள் தமிழ் மக்களைத் துயர நிலை க்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன.
அந்தத் துயர நிலையிலிருந்து தமிழ் மக்களை மீட்டெ டுப்பது தொடர்பான ஆலோசனைகளை முன் வைப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நிரா கரித்ததன் மூலம் தாங்கள் பிரதிநிதித்துவப் படு த்தும் மக்களின் நலனை உதாசீனப் படுத்தி யிருக்கின்றார்கள்.
சமகால அரசியல் நிலை என்றால் என்ன என்ற கேள்வியைக் கூட்டமைப்பு நேற்று முன் தினம் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கேட்டி ருக்கின்றார். தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து பல இன்னல்களை அனுபவிப்பதும் இனப் பிரச்சினை தீர்வின்றி இழுபடுவதும் மோதல் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் மக்களின் துயரங்க ளும் சமகால அரசியல் பிரச்சினைகளே என் பது சிரேஷ்ட அரசியல்வாதியான சம்பந்தனுக் குத் தெரியாததல்ல.
இவ்விடயங்கள் தொடர் பாகப் பேசுவதைத் தவிர்ப்பதற்கான திசைதி ருப்பல் முயற்சியாகவே சமகால அரசியல் நிலை என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்டிருக்கின்றார்.
தமிழ்த் தலைமை அரசாங்கத்துடன் பேச வேண்டிய அவசியம் இப்போது எழுந்திருக் கின்றது. புலிகள் அரசியல் தீர்வுக்குத் தடை யாகவே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தி ருக்கின்றார்கள். இப்போது நடைபெறுகின்ற இராணுவ நடவடிக்கையில் புலிகள் தோல்வி யடைந்து வருவது இனப் பிரச்சினைக்கான அர சியல் தீர்வுக்கு இதுவரை இருந்துவந்த தடை நீங்குவதைக் குறிக்கின்றது. எனவே அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கு இது உகந்த காலம்.
கூட்டமைப்புத் தலைவர்கள் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்ததன் மூலம் மீண்டும் பழைய நிலையைத் தோற்றுவிப்பதற்கு முயற் சிக்கின்றார்கள். இவர்கள் சுற்றிவளைத்து யுத்த நிறுத்தத்தையே வலியுறுத்துகின்றார்கள். புலிக ளைப் பாதுகாத்து அவர்கள் மீண்டும் பலம டைவதற்கான கால அவகாசத்தை வழங்குவ தாகவே யுத்தநிறுத்தம் அமையுமென்பதால் அது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக் குப் பாதகமான விளைவையே ஏற்படுத்தும்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் புலிகள் மீண்டும் பல மடைவதற்கு இடமளிக்கும் வகையில் செயற் பட மாட்டார்கள். அரசியல் தீர்வுக்குத் தடை யாகப் புலிகள் செயற்பட்ட வரலாற்றை அவர் கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மோதல் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் மக்க ளின் துயர் துடைப்பதற்காகவே யுத்தநிறுத்தத் தைக் கோருவதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மோதல் பிரதேசத்திலிருந்து தற்கா லிகமாக வெளியேறுவதன் மூலம் சகல பாதிப் புகளையும் இம்மக்கள் தவிர்த்துக்கொள்ள முடி யும். ஆனால் இவர்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வைத்திருப்பதாலேயே இம் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை ஏற் படுகின்றது.
இம்மக்களின் நலனில் கூட்டமை ப்புத் தலைவர்களுக்கு உண்மையாகவே அக் கறை உண்டென்றால் பாதுகாப்பான இடங் களை நோக்கி வெளியேறுவதற்கு அவர்களை அனுமதிக்குமாறு புலிகளிடம் கோரிக்கை விடு க்க வேண்டும். இக்கோரிக்கையை விடுக்கா மல், காலங்காலமாக வாழ்ந்து வரும் பிரதேச த்திலிருந்து அம்மக்கள் ஏன் வெளியேற வேண் டும் என்று கூட்டமைப்பு கேள்வி எழுப்புகின் றது.
இந்தக் கேள்வி கூட்டமைப்புத் தலைவர் களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தவி ல்லை. இப்போது இக்கேள்வியை எழுப்பும் கூட்டமைப்பினர் தொண்ணூறுகளில் யாழ்ப்பா ணக் குடாநாட்டிலிருந்து அனைவரையும் புலி கள் வெளியேற்றிய போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வன்னி மக்களின் வெளி யேற்றம் தற்காலிகமானது. பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கானது. இராணுவ நடவடிக்கை முடிந்ததும் மீண்டும் தங்கள் சொந்த இடங் களில் இவர்கள் குடியேற முடியும்.
வன்னி மக்களினது பிரச்சினையுடன் ஏனைய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் சமகாலத் தில் தீர்வு காணக்கூடிய அணுகுமுறையே இப் போது தேவை. வன்னியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களைப் பாதிப்பிலிருந்து விடுவிப்ப தற்காகப் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வெளியேற்றுவதும் அதேநேரத்தில் அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப்பதுமே தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் அணு குமுறை. கூட்டமைப்பு இந்த அணுகுமு றையை நிராகரிப்பது தொடர்ந்தும் புலிகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாகவே இருக்கும்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment