இணையத்தளம் மூலம் சீன நிறுவனம் உளவு:
தலாய்லாமா பற்றிய தகவல்களும் சேமிப்பு
இணையத்தளம் மூலம் 103 நாடுகளில் உளவு பார்த்து முக்கிய ஆவணங்களை சீன நிறுவனம் கபளிகரம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனம் ஒன்று இன்டர்நெட் மூலம் இந்தியா உள்ளிட்ட 103 நாடுகளின் முக்கிய அலுவலகங்களில் உள்ள கம்ப் யூட்டர் மூலம், இன்டர்நெட் வழியாக முக்கிய விஷயங்களைக் கிரகித்து, உளவு பார்த்து வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு வல்லுனர்கள் இந்த சதி வேலையை அம்பலப்படுத்தியுள்ளனர். திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா பற்றிய தகவல்களை ஆராயும் போது அவரது கம்ப்யூட்டரிலிருந்து தகவ ல்கள் கண்காணிக்கப்படுவதையும் இந்த வல்லுனர்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர் மற்ற விவரங்களை ஆராயும் போது இந்த சதிவேலை 103 நாடுகளில் நடந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டு ள்ளது.
சீன நாட்டு கம்ப்யூட்டர்களில் இந்த உளவு பார்க்கும் வசதி செய்யப்பட்டு, அந்த கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் அலுவலகங்களில் இருந்து தேவையான தகவல்கள் சுருட்டப்பட்டுள்ளன.
103 நாடுகளில் உள்ள 1,295 கம்ப்யூட் டர்களில் உளவு பார்க்கும் வேலை நடந் துள்ளது பெரிய அளவில் நடந்துள்ள இந்த உளவு குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களும் விசாரிக்கத் துவங்கியுள் ளன.
முழு விவரங்களும் சேகரிக்கப்பட்ட பின், இதில் சீன அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதா இல்லை? என்பது தெரிய வரும் என இந்த உளவு சதியை வெளிப்படுத்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment