இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Sunday, March 15, 2009

மரபு ரீதியான யுத்தம் முடிவடையலாம்; பின்னர் அது வேறு வடிவங்களில் தலையெடுக்கக் கூடும்

இலங்கையில் தற்போது இடம்பெறும் மரபு ரீதியான யுத்தம் முடிவடையலாம். விடுதலைப் புலிகள்அதனை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அதுவேறு வடிவங்களில் தலையெடுக்கக்கூடும்.
மரபு ரீதியான யுத்தத்திற்கு மாறாக விடுதலைப் புலிகள் கெரில்லா யுத்தத்தையும் தற்கொலை தாக்குதல்களையும் மேற்கொண்டால் படையினர் அவற்றை எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்பதை எதிர்வரும் மாதங்களில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது 3 ஆயிரம் போராளிகள் வன்னியில் சிதறுண்டு இருக்கக் கூடும் என இந்திய இராணுவ முன்னாள் புலனாய்வு அதிகாரி கேணல் ஆர். ஹரிஹரன் கூறினார்.

பேட்டியொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு,

கேள்வி: தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழப் போரிற்கும் இந்திய அமைதி காப்பு படையினர் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள பிரதான வேறுபாடுகள் என்று எதை கருதுகிறீர்கள்.

பதில்: ஒரே எதிரியுடன் போரிட்டோம் என்பதை தவிர இரண்டு நிலைகளிலும் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. வெளிநாடு ஒன்றில் இந்திய இராணுவத்தின் எதிர்பார்ப்புகள் தெளிவாக இல்லை.

இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அழுத்தத்திற்கு உட்பட்டு இருந்தது. எனவே இது அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதி ராகவோ இலங்கைக்கு எதிராகவோ இல்லை.

அரசியல் தலைமைத்துவத்தால் சிந்தனை இன்றி இராணுவத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட யுத்தமாகவே கருதுகிறேன்.

எனவே எமது யுத்தம் பரவலான அரசியல் ஆதரவு இன்றி இலங்கையில் பலவகையில் சந்தேகத்திற்கு உரியதானது. இலங்கையில் இந்தியாவின் நடவடிக்கைகள் அரசியல் வேறுபாடுகளை உண்டாக்கிவிட்டது. காங்கிரஸ் தனியாகவும் பா.ஜ.க. ஏனைய கட்சிகளுடன் இணைந்து இரண்டாவதாகவும் ஏனைய பிரந்திய கட்சிகள் மூன்றாவும் வேறுபாடுகள் வளர்ந்துவிட்டது.

இன்னும் டில்லியில் பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செய்ய இது வழிவகுத்துவிட்டது.

மரபு ரீதியாக போரிடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு பல வழிமுறைகளை எமது போர் தளம் அமைத்து விட்டது.

எமது போர் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கும், ஏனைய ஆயுதமேந்திய குழுக்கள் அரசியல் நீரோ டையில் பிரவேசிக்கவும் வழி செய்தது. தமிழர்களின் எண்ணங்களையும் அபிலாசைகளையும் எமது போர் பிரதிபலிக்காது விட்டதால் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக முடிந்தது. இது பல வழிகளில் விடுதலைப் புலிகளுக்கு நன்மையாக முடிந்தது. விடுதலைப் புலிகள் திட்டங்கள் இன்றி நடைமுறையில் ஒன்றாகவும் அந்த நாட்களில் காணப்பட்டது. சர்வதேசமூக அபிப்பிராயத்தையும் விடுதலைப் புலிகள் வென்றெடுத்தனர். விமானப்படை அதன் முழு பலத்தையும் பயன்படுத்தாத வகையில் இராணுவ நடவடிக்கைகள் நவீன முறையில் அமையாது காணப்பட்டது. அதேபோல் கடற்படையும் பயன்படுத்தப்படாத நிலையில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ஆரம்ப பருவமாகவும் இருந்தது.

சுதந்திரம் பெற்ற பின் வெளிநாட்டில் ஏற் பட்ட முதல் இராணுவ அனுபவம் இதுவாகும்.

இராணுவ தலைமையகம் அவசரப்பட்டு திட்டங்கள் இன்றி செயற்பட்டது. வெளிநாட்டு யுத்தம் ஒன்றிற்கு திட்டமிடுவதற்கு ஒரு நல்ல அனுபவம் எமது இராணுவத்திற்கு கிடைத்தது.

ஆனால் அரசியலில் ஸ்திரத்தன்மை இன்மையை உருவாக்கிவிட்டது.

கேள்வி: இலங்கையில் தற்போதைய இராணுவ சமநிலையை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: இராணுவ சமநிலையை கணிப்பிடுவதற்கு இருதரப்பிலும் தகவல்கள் போதியதாக இல்லை. மரபு ரீதியான இராணுவத்திற்கும் போராளிக்குழுவிற்கும் இடையில் இராணுவ சமநிலையை காண முடியாது. அத்துடன் விடுதலைப் புலிகள் மரபு ரீதியான யுத்தத்திற்கு எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மரபு ரீதியான யுத்தத்தி ற்கு மாற்றாக கொரில்லா யுத்தத்ததையும் தற்கொலைத் தாக்குதல்களையும் மேற்கொண்டால் படையினர் அதனை எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்பதை எதிர்வரும் மாதங்களில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்'' தற்போது விடுதலைப் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பெரிதும் பலம் இழந்து காணப்படுகின்றனர். விடுதலைப் புலிகளின் எதிர்காலம் அரசு எவ்வாறு தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கிறது என்பதை பொறுத்தது.

கேள்வி: இராணுவ சமநிலையை பாதித்த பாதிக்கும் காரணிகள் யாவை? சர்வதேச இராணுவ, அரசியல் தலைமைத்துவ ரீதியாக தெரிவிக்க முடியுமா?

பதில்: இதற்கு பதில் அளிக்க அடிப்படைத் தகவல்கள் என்னிடம் இல்லை. இதற்கு சில காலங்கள் ஆகும். அப்போது தகவல்கள் வெளிவரும். அதன் பின்னரே நாங்கள் சரியான அனுமானத்தைப் பெற முடியும். ஆனால் சில விடயங்கள் இப்பொழுதே வெளிப்படையாக தெ?கின்றன. அரசியல் ரீதியாக ராஜபக்ஷ படைத்தரப்பிற்கு வழங்கி வரும் ஆதரவு குறிப்பிடத்தக்கது. ஜெனரல் பொன்சேகாவின் இராணுவ முன்னெடுப்புகள் இங்கு குறிப்பிடத்தக்கது. சர்வதேச சமூகம் தென் ஆசியாவில் யுத்த நிலைவரத்தில் அதிகம் தலையிடாததும் குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன், ராஜீவ் காந்தியின் கொலை மூலம் தன்னை தானே சுட்டுக் கொண்டார். இது இந்தியாவின் பெருமைக்குக் காயத்தை உண்டு பண்ணிவிட்டது.

கேள்வி: தற்போது விடுதலைப் புலிகளின் நிலைப்பற்றி உங்கள் கருத்து?

பதில்: போதிய தகவல்கள் இல்லாததால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. விடுதலைப் புலிகள் பற்றி பிரபாகரனிடம் சரியான தகவல்கள் இருக்குமா என்பது ஐயமே. எனது சிற்றறிவிற்கு எட்டியவரை சுமார் 3000 போராளிகளே வன்னியில் சிதறுண்டு இருக்கக் கூடும்.

கேள்வி: விடுதலைப் புலிகள் விட்ட மிகப் பெரிய தவறு என்ன?

பதில்: தேசிய ரீதியாகவும் இராணுவ ரீதியாகயும் ஏற்பட்ட மாற்றங்களை விடுதலைப் புலிகள் கவனிக்க தவறிவிட்டனர். கிழக்கை இழந்து அங்கு தேர்தல் நடைபெற்ற பின்பும் விடுதலைப் புலிகள் சரியான அனுமானத்தை கொண்டு இருக்கவில்லை. தற்கால நிகழ்வுகளை விடுதலைப் புலிகள் கணிக்க தவறிவிட்டார்கள்.

கேள்வி: எண்பதுகளின் கடைசியில் உங்கள் அமைதிப்படை அனுபவங்கள் பற்றி....?

பதில்: கேள்வி தெளிவாக இல்லை. அமைதிப்படை அனுபவங்கள் எனது முதல் அனுபவம் அல்ல. இராணுவ வீரனின் நோக்கில் சகல யுத்தங்களும் சமம். இலங்கை அனுபவமாக இராணுவம் சலிப்படைந்து காணப்பட்டது. அரசியல் தலைமைத்துவம் இராணுவம் சம்பந்தப்படாத விடயங்களை இராணுவத்திடம் விட்டு இருந்தது. அரசியல் லாபங்களுக்காக இராணுவம் பயன்படுத்தப்பட்டது. இப்போது இராணுவம் சிறப்பான படிப்பினை பெற்றுள்ளது என்று நம்புகிறேன்.

கேள்வி: எண்பதுகளில் இருந்து பிரபாகரனின் ஆளுமை பற்றியும் விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் பற்றியும்...

பதில்: இது ஒரு நூலிற்கான பொருள்.

ஆனால் இப்பொழுதே எழுதுவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. பல தமிழ் நெஞ்சங்களை வென்றெடுத்த ஒருவர். வலுவான ஆளுமை.

இராணுவ ரீதியாகவும் இராணுவ சார்பு அற்ற ரீதியாகவும் தலைமைத்துவம் கொண்டவர்.

அவரது கட்டளைக்கேற்ப தற்கொலைதாரிகள் செயல்படுகின்றனர்.

கேள்வி: கிழக்கிலங்கையின் நிலைவரம் குறித்து என்ன கருதுகிறீர்கள்!

பதில்: மக்கள் நன்றாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் துளிர் விடுவதாக உள்ளது. தேசிய அரசியலில் நுழைந்த தமிழ் தலைவர்களுக்கு ஊக்குவிப்பு அற்ற நிலையை காட்டுகிறது.

கேள்வி: தற்போதைய யுத்தம் இவ்வருடம் நிறைவடைந்துவிடுமா? அப்படியானால் இலங்கை மக்கள் போரின் முடிவில் எதை கருதுவார்கள்?

பதில்: தற்போதைய வடிவிலேயே அது முடிவடைய கூடும். வேறு வடிவங்களில் பின்னர் தலை எடுக்கக் கூடும். யுத்தம் முடிவடையும் காலம் குறித்து சொல்ல வேண்டுமானால் இந்த போர் முடிவடைந்த நிலையில் இரு தரப்பும் ஆற்றும் கருமங்களை கருத்தில்கொள்ள வேண்டும்.

கேள்வி: இலங்கைக்கு உகந்த அரசியல் தீர்வு எது?

பதில்: யாருமே இது குறித்து தெட்டத்தெளிவாக கூற முடியாது. இது இராணுவம் சம்பந்தமானதாக இருக்க கூடாது. அதிகார பரவலாக்கல் முறை மாகாணங்களுக்கு வலுவூட்டுவதாக (இது சில இலங்கை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத வார்த்தையாக கூட இருக்கலாம்) இருந்தால் நல்லது. மக்களின் அபிலாஷைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பெருவாரியான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வாக இருக்க வேண்டும்.


0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top