விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் அவல நிலைமை குறித்து இந்த உலகத்துக்கு எதுவுமே தெரியயாது
'மோதல்கள் தொடர்ந்தால் இலங்கையில் மேலும் பலர் உயிரிழப்பார்கள்'- எம்.எஸ்.எஃப்
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், வட இலங்கையில் மேலும் பல பொதுமக்கள் உயிரிழக்கவும், காயமடையவும் நேரிடும் என்று சர்வதேச உதவி நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
மோதல் பகுதிகளில் அகப்பட்டு அவதியுறும் சுமார் இரண்டு லட்சம் மக்களில் நிலைமை குறித்து வெளியுலகம் இன்னமும் பெருமளவுக்கு தெரிந்துகொள்லாமலேயே இருக்கிறது என்று எம்.எஸ்.எஃப் என்று அழைக்கப்படுகின்ற எல்லைகளற்ற மருத்துவர்கள் என்னும் பிரான்ஸை தலைமையகமாகக் கொண்ட அமைப்பின் தலைவி கூறியுள்ளார்.
இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கான சிறார்கள் உட்பட கிட்டத்தட்ட 2000 பொதுமக்கள் இறந்துபோயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறிய சில நாட்களின் பின்னர் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் நடக்கின்ற மிகவும் கொடூரமான சண்டைகளில் பொதுமக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எம்.எஸ்.எஃப் கூறுகின்றது.
நான்கு மாதங்களாக ஒரு பதுங்குகுளியில் தனது குழந்தையுடன் ஒளிந்திருந்த ஒரு தாயை எம் எஸ் எஃப் மருத்துவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அடுத்த ஒரு பெண்ணின் இரு குழந்தைகள் முதலில் எறிகணையில் உயிரிழந்திருக்கிறார்கள். பின்னர் அந்தப் பெண்ணின் கணவனுக்கு எறிகணை தாக்கியதில் அவரது ஒரு காலும், ஒரு கையும் இழந்துபோன நிலையில் அவரும் பின்னர் காணாமல் போயுள்ளார்.
இங்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் அவல நிலைமை குறித்து இந்த உலகத்துக்கு எதுவுமே தெரியயாது என்றும் கூறுகிறார் எம்.எஸ்.எஃப் அமைப்பின் இலங்கைக்கான தலைவியான அன்னமரி லூவ்.
35 சதுர கிலோ மீட்டர்கள் வரை சுருங்கிப் போயுள்ள ஒரு சிறிய நிலப்பரப்பில், இந்த தருணத்தில் இரண்டு லட்சம் மக்கள் இருக்கின்றார்கள் என்றும், இந்த இடத்தில் பெரும்பாலானவை கடற்கரையும், காடுந்தான் என்றும் அன்ன மரி கூறியுள்ளார்.
போதுமான மருந்தும் கிடையாது என்பதுடன், இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர்களை சுற்றித்தான் கடுமையான சண்ட நடக்கிறது என்றும்,
இதெல்லாம் உயிர்வாழ்வதற்கான கௌரவமான வழி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
வட பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாமில் தங்கியுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்பு கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.
அதேவேளை, பொதுமக்கள் மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறுவதை விடுதலைப்புலிகள் தடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தப்புவதற்காக தான் கடந்த 6 இரவுகள் தொடர்ச்சியாக முயற்சி செய்ததாககவும், தப்ப முயற்சித்தவர்கள் மீது விடுதலைப்புலிகள் சுட்டதாகவும், தனது முன்னாள் ஊழியை ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் அன்ன மரி கூறியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment