ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புலிகளுக்கு விடுத்த சவால்
விடுவிக்கப்படாத பிரதேசத்தில் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை விடுதலை செய்துவிட்டு, முடியுமென்றால் இலங்கை இராணுவப் படையினரை தைரியமாக எதிர்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் மீது உண்மையான அன்பு இருந்தால் அவர்களை பலவந்தமாக தடுத்து வைக்காது சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த இனச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களை இந்த நாட்டு மக்களாக கருதி அரசாங்கம் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் படையினர் மிகவும் பொறுமையுடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யுத்தத்தை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment