நலன்புரி நிலையங்களில் முறைப்பாட்டுப் பெட்டிகள்
இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குறை நிறைகளை அறிந்துகொள்வதற்கு முறைப்பாட்டு பெட்டிகளை அந்ததந்த நலன்புரி நிலையங்களில் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங் அதிபர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
நோர்வே நாட்டின் அகதிகளுக்காக பேரவையின் நிதி உதவியில் தயார்க்கப்பட்டுள்ள இந்த முறைப்பாடு பெட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வாமான நோர்வே நாட்டின் அகதிகளுக்காக பேரவையினர் ஒப்படைத்துள்ளனர்.
இந் பெட்டிகள் வவுனியா பிரசேத செயலாளர் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஊடாக அந்த அந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்படும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இருந்து வவுனியாவுக்கு வந்துள்ள பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களை உறவினர்கள் தங்களுடன் அழைத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா அரச செயலகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பெயர்ப்பட்டியலுக்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்டவர்களை, அவர்களின் உறவினர்கள் கிராம சேவையாளரிக் அனுமதியுடன் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் வெளியில் அழைத்து செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா அரச செயலகத்தில் வெளியடப்பட்டுள்ள தகவல்களின் படி 64 பேர் இவ்வாறு அழைத்து செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருப்பதாகவும், 18ஆம் திகதிவரை வந்தவர்களின் பெயர்களே அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் வந்தவர்களின் பெயர் விபரங்கள் பின்னர் வெளியிடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றுவரைஇராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு 14596 குடும்பங்களைச் சேர்ந்த 44020 பேர் வந்திருப்பதாக வவுனியா அரச செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 15484 ஆண்களும் 16072 பெண்களும் அடங்குவதாகவும், தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு வந்திருக்கும் மக்கள் வவுனியாவில் 15 இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment