கொழும்பை அண்மித்ததான பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கில் புலிகள்
கொழும்பை அண்மித்ததாக இலங்கையின் தென்பகுதியையும் உள்ளடக்கிய பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கத்தை விடுதலைப்புலிகள் கொண்டிருந்ததாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பாரியளவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்படை, விமானப்படை, தற்கொலைப்படையினரை உள்ளடக்கிய தரைப்படை என்பன புலிகளின் இந்த நோக்கத்தை வெளிப்படுத்துவதாக கோதாபய கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்கள், பயிற்சிக்களம் என்பனவற்றை நாம் பார்த்தபோது பாரிய ஈழ இராச்சியத்தை உருவாக்க அவர்கள் நோக்கம் கொண்டிருந்தது தெளிவாகத் தென்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அந்த இடங்களிலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்கள் இந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் நீர்கொழும்பு முதல் யால வரை அநுராதபுரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கி ஈழத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்திருந்ததாகவும் கோதாபய கூறியுள்ளார்.
கொழும்புக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் நீர்கொழும்பு உள்ளது. யால தென்னிலங்கையில் அமைந்துள்ளது.
இந்த மனிதாபிமான நடவடிக்கையை நாம் ஆரம்பித்திராவிடின் என்ன பதில் நடவடிக்கையை நாம் கொண்டிருப்போம், என்பது தெளிவானது என்றும் அவர் குறிப்பிட்டதாக பி.ரி. ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment